கடைசியாக புதுப்பிக்கப்பட்டது மார்ச் 11, 2021
ஈ-மெயில் என்பது யாது?
ஈ -மெயில் அல்லது ஈமெயில் எனஅழைக்கப்படும் மின்னஞ்சல் அனுப்புநரிடமிருந்து ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பெறுநர்களுக்கு செய்திகளைப் பரிமாறிக்கொள்ளும் ஒரு பொறிமுறையாகும்.மின்னஞ்சல்களை அனுப்புவதற்கும் பெறுவதற்கும் உங்களுக்கு தேவையான முதலாவது விடயம் ஒரு மின்னஞ்சல் முகவரியாகும் .மின்னஞ்சலை அனுப்புவதற்கும் பெறுவதற்கும் ஒரு கணக்கை உருவாக்குவதற்கு தற்போது பல சேவை வழங்குநர்களைக் காணலாம்.
உதாரணம் :
- யாகு
- கூகுள்
- கொட் மெயில்
மின்னஞ்சல் பாதுகாப்பு
புதிதாக பயன்படுத்தப்படும் மற்றும் பாதிப்பினை ஏற்படுத்தும் காரணிகளால் பாதிப்பிணை எதிர்கொள்ளும் காரணி என்ற வகையில் தற்போதைய உலகில், தகவல் தொழில்நுட்பத் துறையின் முக்கிய அக்கறைகளில் மின்னஞ்சலின் பாதுகாப்பும் ஒன்றாகும். வணிக தகவல்தொடர்புகளில் தொலைபேசியை விட மின்னஞ்சல் மிகவும் மதிப்புமிக்கது என்று அண்மைய ஆய்வுகள் குறிப்பிட்டுள்ளன.மின்னஞ்சலின் பாதுகாப்பு குறித்த பெரும்பாலான அமைப்புகளும் பொது மக்களும் அக்கறை காட்டுவதில் ஆச்சரியமில்லை.
மின்னஞ்சல் பாதுகாப்புக்கு பிரச்சினையாகவுள்ள அச்சுறுத்தல்கள் எவை ?
வைரஸ்கள்
வைரஸ்கள் தரவை அழித்து முழு மின்னஞ்சல் அமைப்பையும் வீழ்த்தும் திறனைக் கொண்டுள்ளன.
ஸ்பாம்
ஸ்பேம் ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது, ஏனெனில் அதன் அளவு கணினி முறைமையின் கொள்ளளவை நேரடியாக பாதிப்பதுடன் இவை வைரஸ்களையும் காவிச் செல்லக்கூடும்.
ஃபிஷிங்
நிதி நிறுவனங்கள் மற்றும் ஒன்லைன் சில்லறை விற்பனையாளர்களை குறிவைப்பதாக இனங்காணப்பட்ட திருடர்களாக ஃபிஷிங் அறியப்படுகிறது. பயனர்களை ஏமாற்றி அவர்களை தமது கிரெடிட் கார்ட் இலக்கம் மற்றும் கடவுச்சொற்கள் போன்ற தனிப்பட்ட விவரங்களை வழங்க செய்வதற்கு கூடிய எண்ணிக்கையிலான மின்னஞ்சல்களை உருவாக்க ஸ்பேம் நுட்பங்களை ஃபிஷிங் பயன்படுத்துகிறது.
மின்னஞ்சல் அச்சுறுத்தல்களுக்கு எதிராக செயற்படக்கூடிய மிகவும் பொதுவான வழிகள்
- உங்கள் மின்னஞ்சல் சேவையை திறப்பதற்கு முன்
- வைரஸ் பாதுகாப்பு புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும்.
- புதிய மின்னஞ்சல் பெறப்பட்டபோது :
- அனுப்புநரின் நம்பகத்தன்மையை சரிபார்க்கவும்:
- உங்களால் உறுதிப்படுத்த முடியாவிட்டால் – நிராகரிக்கவும்
- தலைப்பு, உடல் மற்றும் இணைப்பு நம்பகமானதா என்பதை சரிபார்க்கவும் :
- உங்களால் நம்ப முடியாவிட்டால்- நிராகரிக்கவும் .
- அனுப்புநரின் நம்பகத்தன்மையை சரிபார்க்கவும்:
விசேட ஆலோசனை
- அறியப்படாத மூலத்திலிருந்து மின்னஞ்சல் டைக்கப்பெற்றால்
- மின்னஞ்சலில் உள்ள எந்த இணைப்புகளையும் கிளிக் செய்ய வேண்டாம்
- எந்த இணைப்புகளையும் பதிவிறக்க வேண்டாம்.
- இதை யாருக்கும் அனுப்ப வேண்டாம்.
- உங்கள் தனிப்பட்ட விவரங்கள் எதையும் சமர்ப்பிக்க வேண்டாம்
மின்னஞ்சலின் கடவுச்சொல்லை பாதுகாப்பான முறையில் எவ்வாறு கட்டமைப்பது
- மின்னஞ்சல் கடவுச்சொல்லின் சிக்கற்பாட்டினை சரிபார்க்கவும்.
- பாதுகாப்பான கடவுச்சொல் பின்வருமாறு கட்டமைக்கப்படும்
உதாரணம் : 1 –
இந்த சூழ்நிலையில் நாம் கடவுச்சொல்லை பயன்படுத்தும் போது நான் நினைக்கிறேன் எளிதில் நினைவில் வைத்துக் கொள்வதற்கான கடவுச்சொல்லை உருவாகுவதற்கான சிறந்த வழி, ‘ballbatwicket’ ,’tomjerrymicky’ அல்லது அதே போன்ற மூன்று சிறிய சொற்களை இணைப்பதாகும். பின் வெவ்வேறு சொற்களின் முதல் எழுத்துக்களை பெரிய எழுத்தாக மாறுவதன்(capitalize) மூலம் அதற்கு அதிக பாதுகாப்பைச் சேர்க்கலாம். உதா :’BallBatWIcket’.பின் கடவுச்சொல்லின் எந்த இடத்திலும் நாம் ஒரு இலக்கத்தை சேர்க்கலாம். அது உங்களுக்கு பிடித்த இலக்கமாக அல்லது வேறு எளிதாக நினைவில் வைத்துக்கொள்ளக்கூடிய இலக்கமாக இருக்கலாம். கடவுச்சொல்லில் ஒரு குறியீட்டையும் சேர்க்க முடியும். அந்த குறியீடு உங்களுக்கு தெரிந்த எதுவாகவும் இருக்கலாம். இப்போது நாம் ‘2BatBallWicket #’ போன்ற பாதுகாப்பான கடவுச்சொல்லை எழுதலாம்.
உதாரணம்: 2 –
“My school at Moratuwa” may become “mi$c#@MT”
உதாரண சூழ்நிலைகள்
சூழ்நிலை 1
ஆண்ட்ரூ வெளிநாட்டு வாடிக்கையாளர்களுடன் கையாளும் ஒரு தொழில் முனைவர். பெரும்பாலும், அவர் உலகம் முழுவதும் பயணம் செய்கிறார்.இன்று காலை ஆண்ட்ரூவின் நண்பர்களில் ஒருவரான “ஜேம்ஸ்” பின்வரும் மின்னஞ்சலைப் பெற்றார்.
அனுப்பியவர் : Andrew@mail.com
பெறுனர் : James@tmail.com
விடயம் : “James I need a big favor”
ஹாய் ஜேம்ஸ் ,
நண்பா தற்போது நான் ஜெர்மனியில் உள்ளதுடன் பாரிய சிக்கலை எதிர்கொண்டுள்ளேன் நேற்றிரவு எனது பணப்பையை தொலைத்து விட்டேன் .இதன்போது என்னுடைய சகல கடன் அட்டைகளையும் பணத்தையும் இழந்துவிட்டேன் .இத்துடன் நான் தற்போது வசிக்கும் ஹோட்டல் முகாமையாளரின் கணக்கு விவரங்களை அனுப்புகிறேன். நான் மீளத் திரும்பி வரும்போது பணத்தை திருப்பித் தருவேன்.சில நிமிடங்களுக்கு முன்பு என்னுடைய சகல அட்டைகளையும் செயலிழக்க செய்துள்ளேன். உனது உதவி எனக்கு பேருதவியாக இருக்கும்.
பெயர் : Michel Thomas மைக்கல் தோமஸ்
கணக்கு இலக்கம் : 100938883980
வங்கி : பார்க்லேஸ் வங்கி
அன்புடன்
ஆண்ட்ரூ.
அத்தகைய மின்னஞ்சலை பெற்ற பிறகு என்ன செய்ய வேண்டும்-
- இந்த மின்னஞ்சலுக்கு பதிலளிக்க வேண்டாம்
- உங்கள் தனிப்பட்ட விவரங்கள் எதையும் அனுப்ப வேண்டாம்
- குறிப்பிடப்பட்ட கணக்கிற்கு எந்த பணத்தையும் பரிமாற்ற வேண்டாம்
- இந்த விடயத்தைப் பற்றி எங்களுக்குத் அறிவிக்கவும்
சூழ்நிலை 2
“மானெல்” நேற்றிரவு பின்வரும் மின்னஞ்சலைப் பெற்றார்
அனுப்பியவர்: Mailinglistadmin@Dmail.com
பெறுனர் : Manel1234@Dmaiil.com
விடயம் : கடவுச்சொல் சரிபார்ப்பு
அன்புள்ள மானெல்,
நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள் என நம்புகிறோம். எமது கணினி முறைமை இற்றைப்படுத்தப்பட்டமையால் பயனர்களின் கடவுச்சொல்லை சரிபார்க்கும் செயற்பாட்டில் டீமெயில் உள்ளது. உங்களது தற்போதைய கடவுச்சொல்லை சமர்ப்பிப்பதன் மூலம் இந்த மின்னஞ்சலுக்கு பதிலளிக்கவும். உங்களது விரைவான பதில் மிகவும் பாராட்டப்படும்.
அன்புடன்
டீமெயில் அணி
அத்தகைய மின்னஞ்சலை பெற்ற பிறகு என்ன செய்ய வேண்டும்-
- இந்த மின்னஞ்சலுக்கு பதிலளிக்க வேண்டாம்
- இதை யாருக்கும் அனுப்ப வேண்டாம்
- இந்த விடயத்தைப் பற்றி “டீமெயில்” க்கு அறிவிக்கவும்
- இந்த விடயத்தைப் பற்றி எங்களுக்குத் அறிவிக்கவும்
சூழ்நிலை 3
“பிலிப்” ஒரு மருத்துவர் என்பதுடன் கடந்த 10 ஆண்டுகளில் அவர் தனது வங்கி நோக்கங்களுக்காக “மெகாபாங்க்” உடன் செயற்பட்டு வருகிறார். இன்று காலை அவருக்கு பின்வரும் மின்னஞ்சல் அவருக்கு கிடைக்கப்பெற்றது .
அனுப்பியவர் :MegaBankonline@megab ank.com
பெறுனர் : Philip123@smail.com
விடயம் : புதிய இணைய வங்கி அம்சங்கள்
அன்பார்ந்த வாடிக்கையாளரே,
“மெகா வங்கி” எப்போதும் மதிப்பு சேர்க்கப்பட்ட சேவைகளைப் பற்றி நினைப்பதுடன் எங்கள் வாடிக்கையாளர்களை அவர்களுடைய விடயத்தில் ஆர்வமுள்ளவராக மாற்றவும் முயற்சிக்கிறது. இணைய வங்கியின் செயல்திறனை அதிகரிப்பதற்காக “மெகா வங்கி” இணைய வங்கி முறைமை இப்போது மேலதிக அம்சங்களைக் கொண்டுள்ளது தயவுசெய்து பின்வரும் இணைப்பைக் கிளிக் செய்து வித்தியாசத்தை உணருங்கள்.
http://www.megabanknewonline. com/login.php
அன்புடன்
மெகா வங்கி அணி
அத்தகைய மின்னஞ்சலை பெற்ற பிறகு என்ன செய்ய வேண்டும்-
- இந்த இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டாம்
- இதை யாருக்கும் அனுப்ப வேண்டாம்
- இந்த விடயத்தைப் பற்றி “மெகா வங்கி ” க்கு அறிவிக்கவும்
- இந்த விடயத்தைப் பற்றி எங்களுக்குத் அறிவிக்கவும்
இந்த ஆவணமானது இலங்கை இணைய சமூக பிரிவுடன் இணைந்து எல்.கே டொமைன் பதிவகத்தின் பயிற்சி பிரிவால் தயாரிக்கப்பட்டது.
மேலதிக தகவல்களுக்கு தயவுசெய்து http://www.nic.lk/index.php/outreach/training-materials ற்கு செல்க