கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஜூலை 20, 2024

கடினமான இலக்காக இருங்கள்

நீங்கள் பகிர்ந்து கொள்ளும் தகவல்களை சைபர் குற்றவாளிகள் தவறாகப் பயன்படுத்தப்படலாம். எனவே மின் தூண்டிலிடல்களை தவிர்ப்பதற்கும், கடினமான இலக்காக இருப்பதற்கும் பின்வரும் படிமுறைகளை பின்பற்றவும்.

• சைபர் குற்றவாளிகள் போலியான மின்னஞ்சல்கள் அல்லது செய்திகளை அனுப்புவதற்கு பொதுத் தகவல்களை பயன்படுத்துகின்றனர். தகவல்களை பகிர்வதற்கு முன் சமூக ஊடக கணக்குகளில் உங்கள் தனியுரிமை அமைப்புகளைப செவ்வை பார்த்து, சிந்தித்து பகிரவும்.

• சமூக ஊடக நண்பர்கள் உங்களைப் பற்றி பகிர்ந்து கொள்ளும் தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் தொடர்பாக அக்கறை கொள்ளுங்கள்.

• அலுவலகத்தில் சந்தேகத்திற்குரிய மின்னஞ்சல்கள் கிடைக்கப் பெற்றால், அத்தகைய விடயங்ளை கையாளும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு அனுப்பி வைக்கவும்.

ஐயோ, ஏற்கனவே கிளிக் செய்துவிட்டேன்! இப்பொழுது என்ன செய்வது???

    • • முதலில், அச்சமடைய வேண்டாம்; நீங்கள் எடுக்கக்கூடிய சில நடவடிக்கைகள் உள்ளன
    • • உங்கள் வைரஸ் தடுப்பு மென்பொருளைத் திறந்து முழுமையான ஸ்கேன் செய்து, வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.

• ஒரு கணக்கிலுள்ள கடவுச்சொல் திருடப்பட்டிருக்கும் போது, அதே கடவுச்சொல் மற்ற கணக்குகளில் பயன்படுத்தியிருந்தால், உடனடியாக ஏனைய எல்லா கணக்குகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ள கடவுச்சொல்லை மாற்றியமைக்கவும்.

• நீங்கள் ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் பணத்தை இழந்திருந்தால்,

அதுதொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையின் (சிஐடி) கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (சிசிஐடி)
011 238 1045 எனும் தொலைபேசி இலக்கம்
அல்லது dir.ccid@police.gov.lk எனும் மின்னஞ்சல் மூலம் பமுறைப்பாடு செய்யவும்

மின் தூண்டிலிடல் மின்னஞ்சலைக் கண்டறிதல்

மின் தூண்டிலிடல் மின்னஞ்சலைக் கவனிப்பது சற்று தந்திரமானதோடு, மிகவும் அவதானமாகப் பயன்படுத்துபவர்கள் கூட இதில் சிக்கிக் கொள்ள நேரிடலாம்.

• ‘மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்’, ‘நண்பர்’ அல்லது ‘சகபாடி“ எனக் குறிப்பிடப்பட்டுள்ளதா? என்பதனூடாக இது உங்களை குறிக்கின்றதா என பெயரைச் சரிபார்க்கவும். உண்மையில் இந்த அனுப்புநருக்கு உங்களைத் தெரியாது. உங்களை மின் தூண்டிலிடல் செய்யக்கூடும் என்பதை இது குறிக்கின்றது.

• சைபர் குற்றவாளிகள் ஒரே மாதிரியான இலட்சினைகளை அமைப்பதன் மூலம் அதிகாரப்பூர்வமாகத் தோற்றமளிக்கும் மின்னஞ்சல்களை உருவாக்கலாம், எனவே இலட்சினைகள் குறித்து விழிப்புடன் இருப்பதோடு, சந்தேகங்களின் போது உத்தியோகபூர்வ இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்..

• “இணைப்பு காலாவதியாகும் முன் அதைக் கிளிக் செய்யவும்” அல்லது “கோரிய விவரங்களை உடனடியாக அனுப்பவும்” போன்ற உடனடி நடவடிக்கை வார்த்தைகள்/வாக்கியங்களைப் கவனமாக நோக்கவும்.

• அனுப்புநரின் மின்னஞ்சல் முகவரி மற்றும் பெயர் முறையானதாகத் தோன்றுகிறதா அல்லது யாராவது ஆள்மாறாட்டம் செய்ய முயற்சிக்கிறார்களா என்பதை சரிபார்க்கவும்

• வங்கி மின்னஞ்களினூடாக முக்கியமான தனிப்பட்ட தகவல்கள் ஒருபோதும் கேட்கப்படமாட்டாது. நீங்கள் அத்தகைய கோரிக்கைகளை பெற்றால் உடனடியாக வங்கிக் கிளைகளை தொடர்புகொள்ளவும்.

 

 

ஃபிஷிங்கைப்  நோக்கவும்

மூலம்: தேசிய குற்றப்புலனாய்வு பாதுகாப்பு மையம்  – https://www.ncsc.gov.uk/