கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஜூன் 8, 2023

சட்ஜிபிரியின் (ChatGPT)

ChatGPT என்றால் என்ன?

ChatGPT என்பது இணைய வாடிக்கையாளர் சேவைகளை வழங்குவதற்காக OpenAI ஆல் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) சாட்போட் மென்பொருள்  ஆகும். இது ஜெனரேட்டிவ் ப்ரீ-ட்ரெய்ன்ட் டிரான்ஸ்ஃபார்மர் (GPT) எனப்படும் மொழி மாதிரியில் இயங்குகிறது. இது முன் பயிற்சி பெற்றது மற்றும் இயற்கை மொழி செயலாக்கத்தை (NLP) பயன்படுத்துகிறது. இது பாடப்புத்தகங்கள், இணையதளங்கள் மற்றும் கட்டுரைகள் போன்ற பல்வேறு மூலங்களில் இருந்து தரவுகளை சேகரிக்கிறது. அந்த மூலங்களைப் பயன்படுத்திக் கொண்டு, அது அதன் சொந்த மொழியை மாதிரியாக்குகிறதுடன் மனிதர்கள் மற்றொரு நபருடன் அரட்டை அடிப்பதாக உணரும் வகையிலும் மிகவும் சரளமாக உரையாடல் தொனியில் இயற்கையான பதில்களை வழங்குகிறதால் இதனால் மனிதர்கள் மற்றொரு நபருடன் அரட்டை அடிப்பது போன்ற உணர்வை பெறுகிறார்கள்.

ChatGPTயை உருவாக்கியவர் யார்?

OpenAI மூலம், ஒரு அமெரிக்கச் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி ஆய்வகம் இதனை உருவாக்கியுள்ளது. இந்நிறுவனம் 2022 ம் ஆண்டு நவம்பர் மாதம் 30 திகதியன்று ChatGPT ஐ அறிமுகப்படுத்தியது.

ChatGPT எவ்வளவு பிரபலமானது?

சுவிஸ் வங்கி யூபீஎஸ் இனால் மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வின்படி, ChatGPT தொடங்கப்பட்டு இரண்டு மாதங்களுக்குப் பிறகு 100 மில்லியன் செயலில் உள்ள பயனர்களைக் கொண்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. TikTok செயலியின் பிரபலத்துடன் ஒப்பிடும் போது, TikTok ஆனது 100 மில்லியன் பயனர்களை அடைய 9 மாதங்களை எடுத்துள்ளது.

ChatGPTயின் பயன் என்ன?

1. முக்கியமாக பதில்களை உருவாக்குவதற்காக – சாட்போட்கள் மற்றும் மெய்நிகர் உதவியாளர்களாக
2. குறியீடுகள் மற்றும் பிழைதிருத்தங்களை எழுத
3. கட்டுரைகள் மற்றும் வலைப்பதிவு இடுகைகளை எழுத
4. மொழிபெயர்ப்புகளுக்கு
5. வணிகத் திட்டங்கள் மற்றும் சுயவிவர கோவைகளை வரைவதற்கு
6. கதைகள் மற்றும் கவிதைகள் எழுத
7. இசை தொடர்பான உள்ளடக்கங்களை பரிந்துரைக்க

 

ChatGPT ஐ எவ்வாறு அணுகுவது என்று இப்போது பார்ப்போம்

1. chat.openai.com ஐப் பார்வையிடவும்
2. OpenAI கணக்கை உருவாக்கவும்.
3. நீங்கள் உள்நுழைந்தவுடன் உங்கள் ChatGPT யில் இருந்து கேள்விகளைக் கேட்க மற்றும் உரையாடல்களை ஆரம்பிக்கலாம்.

 

மூலம்:

https://www.pcguide.com/apps/what-is-chat-gpt/

https://www.zdnet.com/article/what-is-chatgpt-and-why-does-it-matter-heres-everything-you-need-to-know/