கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஜூலை 21, 2021
ஒன்-லைன் மூலமான கல்வி இங்கே தொடர்ந்தும் இருக்கப் போகிறது . நீங்கள் வேலையை அணுகும் விதத்திலும், மூலோபாயத்தைத் திட்டமிடுவதிலும், பணிகளைச் செயல்படுத்தும் முறையிலும் இது புதியதொரு முன்னுதாரண மாற்றத்தை உள்ளடக்கியதாக அமையும். பாரம்பரிய வகுப்பறையிலிருந்து ஒன்-லைன் மூலமான பயன்முறைக்கான மாற்றமானது உரிய தேவையான விளைவுகளை பெற்றுக்கொள்ள புதிய விதத்தில் சிந்தித்து மாறுபட்ட அணுகுமுறைகளைக் கொண்ட மூலோபாய திட்டமிடலை வேண்டி நிற்கின்றது.
ஒன்லைன் முறைக்கு செல்லுதல்
ஒன்-லைன் மூலமான கல்வியின் ஆரம்பத்துடன் அதனது அபிவிருத்தி , விளக்கக்காட்சி, வழங்கல் மற்றும் மதிப்பீடு / சோதனைக்கு புதிய கருவிகள் /பயன்பாடுகள் உருவாகியுள்ளன. ஒன்-லைன் கற்றல் எதிர்பார்த்த முடிவுகளை அடைய வேண்டுமானால் இந்த கருவிகள் / பயன்பாடுகள் மற்றும் கற்றல் சூழலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய சிறந்த புரிதல் மிக முக்கியம். ஒன்-லைன் கற்றலுக்காக இலங்கையில் மிகவும் பிரபலமான பயன்பாடு ஜூம் (Zoom) ஆகும். இங்கே மாணவர்கள் ஆசிரியர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம். (ஒன்லைன் மூலமான செயலிகளை பக்கத்தில் தரப்பட்டுள்ள கட்டத்தில் பார்க்கவும்)
மாணவர் ஆசிரியர் உறவு
இதில் காணப்படும் மிக முக்கியமான மாற்றம் மாணவர் ஆசிரியர் உறவாகும் . பாரம்பரிய வகுப்பு அறையில் ஆசிரியர் ஒரு உயர் மட்டத்திலிருந்து பாடத்தை வழங்குகிறார், இங்கே மாணவர் செயலற்ற பெறுநராக இருக்கிறார். இருப்பினும், ஒன்-லைன் கற்றலில் நிலைமை தலைகீழானது. மாணவர் சுய கற்றல் நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ளும் அதே நேரத்தில் ஆசிரியர் அதற்கு வசதி வழங்குனராக மாறுகிறார். மாணவரின் பங்கு இந்த இடத்தில் செயலற்ற பெறுநரிடமிருந்து உறுதியான சுய-கற்பவராக மாறுகிறது, அதே நேரத்தில் ஆசிரியர் ‘மேடையில் நின்று பேசுபவர் ’ என்னும் நிலையில் இருந்து ‘பக்கத்தில் இருந்து வழிகாட்டுபவராக மாறுகிறார்.
புதிய பாத்திரத்தில் ஆசிரியர் தனது குரல் மற்றும் தெரிவின் வழியாக மாணவர்களை ஈடுபடுத்த வேண்டும். கேள்விகளைக் கேட்டல், நகைச்சுவையைப் பயன்படுத்த பயப்பட தேவையில்லை . உங்களிடம் ஆயிரம் பேர் ஒன்லைன் வழியாக கற்பவர்களாக நேரலையில் இணைக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் ஒவ்வொருவரையும் தனிநபர்களாக கருதுங்கள். படங்களுடன் ஏற்றப்பட்ட சுவாரஸ்யமான விளக்கக்காட்சிகளுடன் உங்கள் திரையைப் பகிரவும். வெறும் குரலை மாத்திரம் பயன்படுத்துவது மாணவருக்கு செய்தியைத் தக்கவைப்பதைத் தடுக்கிறது.
விடய விளக்கக்காட்சியின் கருவிகள்-
உள்ளடக்க விளக்கக்காட்சிக்கு பவர்பொயின்ற்(PowerPoint) மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. திரையில் காணப்படும் விடய உள்ளடக்கத்தை மாணவர்களுக்கு ஆசிரியர் ஒருங்கிணைப்பதை மேம்படுத்துகின்ற விதத்தில்இது பயன்படுகிறது . இந்த வசதியை வழங்கும் ப்ரெஸி(Prezi) பயன்பாடு சிறந்த முடிவுகளை அளிக்கிறது
உள்ளடக்கத்தை ஒழுங்கமைத்தல்
கல்வி உள்ளடக்கமானது கற்றல் முகாமைத்துவ அமைப்பில் (எல்.எம்.எஸ்) பதிவேற்றப்படுகிறது. எல்.எம்.எஸ் என்பது பாடநெறிகள், பயிற்சி திட்டங்கள், கற்றல் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் போன்றவை தொடர்பில் தானியங்கியாக இயங்கல், பாடநெறிக்களை வழங்கல், நிர்வகித்தால், ஆவணப்படுத்தல், கண்காணித்தல், அறிக்கையிடுதல் போன்றவற்றுக்கான மென்பொருள் பயன்பாடாகும். கற்றல் முகாமைத்துவ அமைப்புகள் மூலம் இந்த முறைமை செயல்படுத்தப்படுகிறது. இந்த பயன்பாடு மாணவர்களால் பாடநெறியை சுயமாக அணுகவும் கற்றுக்கொள்ளக்கூடியதாக பாடத்தின் உள்ளடக்கத்தை பதிவேற்றம் செய்ய ஆசிரியர்களுக்கு உதவுகிறது. இதில் காணப்படும் ஏனைய வசதிகளில் முக்கியமான அறிவிப்புகளை வெளியிடுதல் , தொகுதிகள், பரீட்சைகள் மாணவர்களை தரப்படுத்தல் ஆசிரியர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் ஒத்திசைவற்ற உரையாடலுக்கான விவாத பலகைகள் மற்றும் ஒன்லைன் உரையாடல்கள் ஆகியவை அடங்கும்.
ஒன்-லைன் வழியிலான பரீட்சைகள்
மாணவர்களின் பகுப்பாய்வு சிந்தனை தேவைப்படும்போது ஒன்-லைன் வழியிலான பரீட்சைகள் கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளன .பரீட்சைகளின் போது திறந்த புத்தகத் பரீட்சைகள் மாணவர்கள் குறிப்புகள் / உரை புத்தகங்களைக் குறிப்பிட அனுமதிக்கின்றன. இது பிரதிபலிப்புக்கான நேரத்தை அனுமதிப்பதுடன் பகுப்பாய்வு சிந்தனையை ஊக்குவிக்கிறது. மாணவர்களின் அறிவு, கிரகித்தல் மற்றும் விமர்சன சிந்தனை திறன்களின் பயன்பாட்டை சோதிக்க ஆசிரியர்களை இந்த முறைமை அனுமதிக்கிறது. இதற்கு மேலதிகமாக கூடுதலான விளக்கத்தை பெற இது வாய் மொழி மூலமான பரீட்சையுடன் இணைக்கப்பட வேண்டும்.
ஒன்-லைன் நெறிமுறைகள்.
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கலாச்சார மற்றும் சமூக பின்னணியில் உள்ள வேறுபாடுகள் அவர்களின் ஒழுக்கம் மற்றும் நடத்தையில் செல்வாக்கு செலுத்துவதன் காரணமாக ஒன்-லைன் கல்வியில் நெறிமுறை சிக்கல்கள் எழுகின்றன. ஒன்லைனில் ஏற்றுக்கொள்ளக்கூடிய நடத்தைக்கான விதிமுறைகளில் அவர்கள் பொதுவான நிலையை பேண வேண்டும். ஒருவர் மற்றவரின் கண்ணியத்தையும் கௌரவத்தையும் சேதப்படுத்தாத வகையில் செயல்பட வேண்டும் என்பதே அடிப்படை முன்மாதிரியாகும்.
உதாரணமாக ஒன்லைனில் இருக்கும்போது அவர்கள் பொதுவாக பேசும் மொழியைப் பயன்படுத்த வேண்டும்.
சைபர் அச்சுறுத்தல்கள் மற்றும் அதனது பாதுகாப்பு
இணைய கல்வியை வெற்றிகரமாக செயற்படுதத்துவதில் சைபர் அச்சுறுத்தல்கள் பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. எனவே ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இருவரும் இணைய பாதுகாப்பை உறுதிப்படுத்த அவர்கள் எதிர்கொள்ளக்கூடிய ஆபத்துகள் மற்றும் கண்காணிப்பு கருவிகள் குறித்து அறிந்திருப்பது அவசியம்.
- வைஃபை வலையமைப்புக்கு அங்கீகரிக்கப்படாத அணுகல்
பெரும்பாலான WIFI கணக்குகள் நிறுவப்பட்டதும் இயல்புநிலை வலையமைப்பின் பெயர் அல்லது சேவை தொகுப்பு அடையாளங்காட்டி (SSID) ஐக் கொண்டுள்ளன. வைஃபை வலையமைப்புடன் வழங்கப்படும் இயல்புநிலை SSID ஆனது உரிய சேவை வழங்குனரின் பெயரை கொண்டிருப்பதால் அதைப் பயன்படுத்தி ஹக்கர்களால் அதற்குள் நுழையக் கூடியதாக அமையும் .
SSID ஐ தனிப்பட்ட தகவல்களின் தடயங்கள் எதுவுமில்லாமல் மாற்றுவது எப்போதும் பாதுகாப்பானது. - ஃபிஷிங் மின்னஞ்சல்கள்
ஃபிஷிங் மின்னஞ்சல்கள் தீங்கிழைக்கும் இணைப்புகளைக் கொண்ட மின்னஞ்சல்களாகும், அவற்றை கிளிக் செய்யும்போது, முழு கணினியிலும் தீம்பொருளை அவை பரப்பும். இதனைவிட இதனையொத்த முடிவைத் தரக்கூடிய ஒரு குறிப்பிட்ட இணைப்பைக் கிளிக் செய்யும்படி நீங்கள் கோரப்படலாம். இணைப்பை உங்களால் அடையாளம் காண முடியாவிட்டால் அதைக் கிளிக் செய்ய வேண்டாம். மேலும் விவரங்களுக்கு இந்த கட்டுரையைப் பார்க்கவும் - பாதுகாப்பற்ற இணைய இணைப்புகள்
வீட்டு வைஃபை இணைப்புகளைப் பயன்படுத்தி வேலை செய்யும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது வலையமைப்புகளை அணுகும் தீங்கிழைக்கும் கூறுகளுக்கு தங்களை வெளிப்படுத்துகிறார்கள். வைஃபை நெட்வொர்க்குகள் தனிப்பட்டவை என்பதையும் பாதுகாப்பானவை என்பதையும் எப்போதும் உறுதிப்படுத்தவும். உங்கள் வைஃபை க்கு எழுத்துக்கள் சின்னங்கள் மற்றும் எண்களுடன் தனித்துவமான வயர்லெஸ் நெட்வொர்க் கடவுச்சொல் இருப்பதை உறுதிசெய்து, இணைப்பு நிறுவப்பட்ட உடனேயே வைஃபை மொடத்தின் குறியாக்க அமைப்பை ( encryption setting) செயற்படுத்தவும் . - பாதுகாப்பற்ற வலைத்தளங்கள்
மாணவர்களும் ஆசிரியர்களும் தாங்கள் பார்வையிடும் இணைய தளங்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒரு இணைய முகவரியானது “https” உடன் தொடங்கினால், அந்தத் தளம் பாதுகாப்பானது என்று சான்றளிக்கப்படுகிறது. முகவரியானது “http” உடன் மட்டுமே தொடங்கினால் அது சான்றளிக்கப்படாததுடன் இவை போன்ற வலைத்தளங்களில் கிளிக் செய்யும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். - பாதுகாப்பற்ற செயலிகள்
பாதுகாப்பற்ற பயன்பாடுகள் ஹக்கர் செயல்பாட்டின் அபாயத்தை அதிகரிக்கும். உங்கள் கணக்குகளை பாதுகாப்பாக வைத்திருக்க இந்த பயன்பாடுகளுக்கான உள்நுழைவுகளைத் தடுப்பது சிறந்த நடைமுறையாகும் .
எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் சாதனங்களை திருடர்களிடமிருந்து விலக்கி வைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
மாணவர்களுக்கான மேலதிக உதவிக்குறிப்புகள்
- ஒன்லைனில் கற்கும்போது கவனச்சிதறல்கள் – கல்விசாரா தளங்கள், விளையாட்டுகள் போன்றவற்றிற்கு செல்வதைத் தவிர்க்கவும். இருப்பினும், உங்கள் கல்வி இலக்குகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் பலவகையான தகவல்களை அணுக இணையம் வாய்ப்புகளை வழங்குகிறது. இணையத்தில் உலாவும்போது தேவையான விடயங்களை மாத்திரம் தெரிவு செய்து அவற்றை கற்றுக்கொள்ளுங்கள்.
- அறிமுகமில்லாத மின்னஞ்சல்களைக் கிளிக் செய்வதைத் தவிர்க்கவும், இது மோசடிகள், இணைய துன்புறுத்தல் போன்றவற்றுக்கு உங்களை கவர்ந்து இழுத்துச் செல்லும்.
- மொபைல் போன்கள் / கணினிகளுக்கு அடிமையாவதைத் தவிர்க்கவும். இந்த சாதனங்களைப் பயன்படுத்துவதில் பொதுவான நிலையை பேணுங்கள் .
ஆசிரியர்களுக்கான மேலதிக உதவிக்குறிப்புகள்.
- உள்நுழைவு கடவுச்சொற்களை யாருக்கு வழங்குகிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். அதை பெற்றுக் கொள்பவர்கள் தீங்கிழைக்கும் நோக்கத்தைக் கொண்ட ஆபத்தான நபர்களாகவும் இருக்கலாம்.