கடைசியாக புதுப்பிக்கப்பட்டது டிசம்பர் 19, 2024

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களும் இடங்களும் கற்பனையானவை.

பிரசாத் கடற்படையில் பணிபுரிந்து வந்தார், மேலும் தனது புதிய வங்கிக் கணக்கிற்கு ஒன்லைன் வங்கிச் சேவையை செயல்படுத்த விரும்பினார். வங்கிக்குச் சென்று இந்த விருப்பத்தைப் பற்றி கேட்பதற்கு அவருக்கு விடுமுறை கிடைப்பது கடினமாக இருந்ததால், இதைச் செய்வதற்கான வழியைத் தேடிக்கொண்டிருந்தார். ஒரு நாள், “ஒன்லைன் வங்கி வசதிகள்” பற்றிய விளம்பரத்தை அவர் பேஸ்புக்கில் பார்த்தார்.

விளம்பரத்தை வெளியிட்ட நபரை பிரசாத் தொடர்பு கொண்டார்.

பிரசாத்: வணக்கம், எனது XXX வங்கிக் கணக்கிற்கு ஒன்லைன் வங்கிச் சேவையை செயல்படுத்த விரும்புகிறேன்.
விளம்பரதாரர்: ஆம், என்னால் உதவ முடியும். தயவுசெய்து உங்கள் கணக்கு இலக்கத்தினையும் உங்கள் தேசிய அடையாள அட்டையின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலையும் எனக்கு அனுப்ப முடியுமா?

பிரசாத் தனது தேசிய அடையாள அட்டையுடன் கோரிய விவரங்களை அனுப்பினார்.

காலங்கள் கடந்து போக, பிரசாத் வேலையில் மும்முரமாகிவிட்டார். சம்பளம் கிடைத்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவரது வங்கியிலிருந்து ஒரு செய்தி வந்தது, அதில் அவரது கணக்கிலிருந்து ரூ. 45,000/- எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. சமீபத்தில் அவர் எந்தப் பரிவர்த்தனையும் செய்யாததால் பிரசாத் ஆச்சரியப்பட்டார். அவர் குழப்பமடைந்தார் அத்துடன் தனது அறைத் தோழரிடம் இதைப் பற்றிச் சொன்னார். அவரது தோழர் ஹிதவதியைத் (Hithawathi) தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

பிரசாத் ஹிதவதியை அழைத்து என்ன நடந்தது என்பதை விளக்கினார். வங்கிகள் ஒருபோதும் இதுபோன்ற விளம்பரங்களை வெளியிடுவதில்லை, குறிப்பாக அதிகாரப்பூர்வமற்ற முறையில் என்று ஹிதாவதி அவரிடம் தெரிவித்தது. இது ஒரு மோசடி என்பதால், ஹிதவதி அவரிடம் ஆதாரங்களைக் (தொடர்புடைய ஸ்கிரீன்ஷாட்களுடன் கூடிய விளம்பரத்தின் இணைப்புகள்) குறித்துக் கொண்டு கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவைத் (சிசிஐடி) தொடர்பு கொள்ளுமாறு சொன்னார்கள். மேலும், ஹிதவதி பிரசாத்தை XXX வங்கியைத் தொடர்பு கொண்டு மோசடி குறித்து தெரிவிக்குமாறு அறிவுறுத்தினர். வழங்கப்பட்ட வழிகாட்டுதலுக்கு பிரசாத் ஹிதவதிக்கு நன்றி தெரிவித்தார்.

முன்னெச்சரிக்கைக் குறிப்புகள்:

  • வங்கி விடயங்கள் தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால், தயவுசெய்து உரிய வங்கியைத் தொடர்பு கொள்ளவும், அவர்கள் உங்களுக்கு வழிகாட்டுவார்கள்.
  • உங்கள் தனிப்பட்ட தகவல்கள் அல்லது ஆவணங்களை (தேசிய அடையாள அட்டை, முகவரி போன்றவை) அந்நியர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம், ஏனெனில் அவை தவறாகப் பயன்படுத்தப்படும்.
  • சமூக ஊடகங்களில் நம்பகமான நிறுவனத்திடமிருந்து வந்ததாகக் கூறும் சந்தேகத்திற்கிடமான விளம்பரங்களைப் புகாரளிக்கவும், ஏனெனில் அவற்றில் நிறைய போலி உள்ளடக்கம் உள்ளது. அந்த நிறுவனத்தை நேரடியாக அழைத்து அவர்களுக்குத் தெரிவிக்கவும்.
  • முகப்புத்தகம் போன்ற சமூக ஊடக தளங்களில் மோசடியான பதிவுகளைப் புகாரளிப்பது எப்படி என்பது குறித்த வழிகாட்டுதலுக்கு ஹிதவதியைத் தொடர்பு கொள்ளவும்.
  • இணையம் வழியிலான-குற்றவியல் முறைப்பாடுகள் தொடர்புடைய ஆதாரங்கள் உங்களிடம் இருப்பின் (சரியான இணைப்புகள் அல்லது திரைக்காட்சிகள் போன்றவை) அவற்றை CID யிடம் ஒப்படைக்கலாம் அல்லது பதிவுத் தபாலில் “The Director, Criminal Investigation Department, Colombo 01” என்ற முகவரிக்கு அனுப்பலாம் அல்லது dir.ccid@police.gov.lk / report@cid.police.gov.lk என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.