கடைசியாக புதுப்பிக்கப்பட்டது செப்டம்பர் 3, 2021
ஸ்பாம் எதிர் ஸ்காம்
ஸ்பாம் (குப்பை) பொருத்தமற்ற, தேவையற்ற மற்றும் கோரப்படாத சந்தைப்படுத்தல் மின்னஞ்சல்கள், பதிவுகள் மற்றும் செய்திகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. | தந்திரமான, தவறான அழைப்புகள் / அரட்டைகள் / எஸ்எம்எஸ் மற்றும் போலி இடுகைகள் / சுவரொட்டிகள், ஒருவரை ஏமாற்றுவதற்காக தீங்கிழைக்கும் நோக்கத்துடனான பத்திரிகை விளம்பரங்கள் முதலியவற்றை ஸ்காம்கள் கொண்டுள்ளன . |
ஸ்பேமர்கள் உங்கள் தகவல்களைத் திருடவோ அல்லது உங்களை மோசடி செய்யவோ விரும்பவில்லை. வெறுமனே அவர்கள் முடிந்தவரை கூடுதலான நபர்களுக்கு தகவல்களை வெளிப்படுத்த முயற்சிக்கிறார்கள். | மக்களை அவர்களது தகவல் மற்றும் / அல்லது பணத்திலிருந்து விலக்கி ஏமாற்றுவதற்காக மோசடி செய்பவர்கள் இல்லாத வாய்ப்புகளை இருப்பதாக காட்டுகிறார்கள். |
தேவையற்ற அல்லது கோரப்படாத தகவல் தொடர்பு மூலமான விற்பனையே அவர்களின் குறிக்கோள். | மோசடி மூலம் ஒருவரை ஏமாற்றுவதன் மூலம் பயனடைவதே அவர்களின் குறிக்கோள். |
மோசடி அல்லது ஏமாற்று நடத்தையை விட இது அபாயம் குறைந்ததாக இருக்கிறது. தீங்கு விளைவிக்காவிட்டாலும், இது நிச்சயமாக எரிச்சலூட்டுவதாகும். | இது தீங்கு விளைவிப்பதுடன் பிரச்சினைகளை உருவாக்கி / பணம் அல்லது ஏனைய மதிப்புமிக்க விஷயங்களை இழப்பதில் போய் முடியும் . |
பொருட்கள் அல்லது சேவைகளை ஊக்குவிக்கும் விளம்பர நிறுவனத்திலிருந்தோ அல்லது இத்தகைய வேலைகளை செய்யும் நிபுணர் மூலமாகவோ நீங்கள் பெரும்பாலும் மின்னஞ்சல் வழியாக அவற்றைப் பெறலாம். ஸ்பாம்களை அனுப்புபவர்களுக்கு அவர்களின் பெறுநர்கள் யார் என்று கூட தெரியாது, ஆனால் அவர்கள் பெருமளவிலான செய்திகளை அனுப்புவதில் ஈடுபடுகிறார்கள், இதன் மூலமாக ஏமாற்றப்பட்டவர்கள் எஞ்சியதை செய்ய காத்திருக்கிறார்கள். |
பாதிக்கப்பட்டவரின் நம்பிக்கையைப் பெறுவதன் மூலம் இந்த மோசடி திட்ட தந்திரம் புத்திசாலித்தனமாக வெற்றிகரமாக செய்யப்படுகிறது. பல ஒன்லைன் மோசடிகள் ஸ்பாம்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டன. அதாவது ஒரு மோசடிக்கான பல கருவிகளில் ஸ்பாமும் ஒன்றாகும். |
ஸ்பாமுக்கான உதாரணங்கள்
|
பொது மக்கள் ஸ்காம் (மோசடி) செய்யப்படுவதற்கான உதாரணங்கள்
|
ஸ்பாம் என்பது அதனைப் பார்க்கும்போது உங்களை கிளிக் செய்ய வைத்து நம்ப வைக்கும் ஒரு ஒரு செய்தியாகும். | நீங்கள் ஒரு ஸ்பாமை நம்பி அதைக் கிளிக் செய்கிறீர்கள் ஆனால் அதன் மூலமாக உங்களது நோக்கத்தை அடையத் தவறினால் நீங்கள் ஸ்பாம் செய்யப்பட்டுள்ளீர்கள் என்று அர்த்தப்படும் . |
மேலே உள்ள அட்டவணையில் உள்ள மோசடியிலிருந்து ஸ்பாமை வேறுபடுத்துவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும், ஸ்பாம் வடிகட்டிகளை தவிர்க்கக்கூடியதாக வடிவமைக்கப்பட்ட எழுத்துப்பிழைகள், இணைப்புகள், தொடுப்புக்கள், தலைப்புக்கும் உள்ளடக்கங்களுக்கும் இடையிலான வேறுபாடு கொண்ட மற்றும் பெரும்பாலான நேரங்களில் முடிவடைவது போல/ முடிவடையும் திகதி அண்மித்துள்ளது போன்ற அவசரத்தைக் காட்டும் / உங்களை கலவரமடையச் செய்யக் கூடிய செய்தி உண்மையாக இருந்தால் நல்லது போல தோற்றமளிக்கும் சலுகைகள் முதலியவற்றை உள்ளடங்கிய வடிவங்களில் ஸ்பாம் உங்களிடம் வரலாம்.
பின்வரும் வட்ட வரிப்படம் 2019 இல் ஸ்பாமில் பிரதானமாக உள்ளடங்கக் கூடியவற்றை காட்டுகிறது . இங்கே ஸ்காமின் சதவீதம் குறிப்பிடத்தக்கவளவு அதிகமாக உள்ளது; 5 இல் 2 ஸ்காம்களாகும் .கட்டுப்பாடுகள் மற்றும் விழிப்புணர்வு அளவைப் பொறுத்து இந்த விகிதம் நாட்டிற்கு நாடு வேறுபடுகிறது.
ட்ரூகோலர் (Truecaller) இனால் அறியப்பட்டதன்படி , கீழேயுள்ள நாடுகள் கடந்த ஆண்டு ஸ்பாம் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்கள் மூலமாக கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வகையான எரிச்சலூட்டும் ஸ்பாம் அழைப்புகள், எஸ்எம்எஸ்கள் அல்லது மின்னஞ்சல்கள் தீங்கு விளைவிக்கும் மோசடிகளையும் கொண்டிருக்கக்கூடும் என்பது மனதில் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியதாகும்.
எனவே, பாதுகாப்பாக இருப்பதற்கு வழிகாட்டல்களை பின்பற்றுதல் மிகவும் அவசியமாவதுடன் உங்கள் சாதனத்தில் புதுப்பித்த வைரஸ் தடுப்பு மென்பொருள்இயக்குவதை உறுதிசெய்தல் , ஸ்பாமைத் தடை செய்தல் அல்லது பிரத்தியேகமில்லாத விடயங்களைக் கையாள தனி மின்னஞ்சல் முகவரியைப் பராமரித்தல் மூலமாக ஸ்பேம் மோசடியில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.
சைபர் வெளியில் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது பற்றி மேலும் அறிக.
மேற்கோள்
https://hiya.com/blog/2016/08/17/unwanted-calls-explained-difference-spam-scam/
https://www.getsafeonline.org/protecting-your-computer/spam-and-scam-email/
https://support.indeed.com/hc/en-us/articles/360040122351-Spam-vs-Scam
http://www.afd-techtalk.com/spam-scam/#:~:text=In%20other%20words%2C%20a%20scam,many%20tools%20for%20a%20scam.
https://truecaller.blog/2019/12/03/truecaller-insights-top-20-countries-affected-by-spam-calls-sms-in-2019/
https://www.informit.com/articles/article.aspx?p=397914
https://www.informit.com/articles/article.aspx?p=1234199&seqNum=6