கடைசியாக புதுப்பிக்கப்பட்டது செப்டம்பர் 29, 2022


குக்கீஸ் என்றால் என்ன?

  • அவை சிறிய text files வடிவிலான கோப்புகளாகும்
  • நீங்கள் பார்வையிடும் இணையதளம் ஊடாக நீங்கள் பயன்படுத்தும் சாதனத்திற்கு இவை அனுப்பப்படும்
  • பயனர் அவற்றை ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம்

குக்கீஸ்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் என்ன நடக்கும்?

  •  அவை நீங்கள் பயன்படுத்தும் சாதனத்தின் இணைய உலாவியில் சேமிக்கப்படும்
  • குக்கீஸ்கள் மூலமாக உங்கள் உலாவியிலிருந்து தரவைக் கண்காணிப்பதோடு அவற்றைச் சேகரிக்கிறது.
  • சேகரிக்கப்பட்ட தரவு இணையதள உரிமையாளருக்குத் திருப்பி அனுப்பப்படும்

குக்கீஸ்களை ஏற்றுக்கொள்வது தீங்கான காரியமா?

  • இது சம்பந்தப்பட்ட இணையதளத்தைப் பொறுத்தது
  • உங்கள் தரவை யார் அணுகுவார்கள், அவர்கள் அத்தரவை வைத்துக்கொண்டு உண்மையில் என்ன செய்வார்கள் அத்தோடு குக்கீஸ்களை ஏற்காதது நீங்கள் பார்வையிட விரும்பும் தளத்தை அணுகுவதைத் தடுக்கிறதா என்பதை பொறுத்தது.

இணையதளங்கள் ஏன் குக்கீஸ்களை ஏற்கும்படி கேட்கின்றன?

2018 ஆம் ஆண்டு மே மாத்தில் இயற்றப்பட்ட ஐரோப்பிய பொது தரவு பாதுகாப்பு ஒழுங்குமுறை (GDPR) எனப்படும் தரவு தனியுரிமைப் பாதுகாப்புச் சட்டமே இதற்குக் காரணமாகும். அதன்படி, இணையத்தள உரிமையாளர்கள் தரவு சேகரிப்புக்காக பயனர்களின் உலாவிகளில் குக்கீஸ்களை சேமிப்பதற்கு முன் பயனர்களின் அனுமதியைப் பெற வேண்டும்.

நீங்கள் குக்கீஸ்களை ஏற்றுக்கொள்வது கட்டாயமா?

குக்கீஸ்களை ஏற்பதா அல்லது நிராகரிப்பதா என்பதைத் தீர்மானிக்கும் போது, ​​இரண்டு முக்கிய விடயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

  • குக்கீஸ்களை ஏற்றுக்கொள்வது கட்டாயமா?  இல்லை, நீங்கள் குக்கீஸ்களை ஏற்க வேண்டியதில்லை. GDPR போன்ற விதிகள் உங்கள் தரவு மற்றும் உலாவல் வரலாற்றின் மீது உங்களுக்குக் கட்டுப்பாட்டை வழங்கும் வகையில் தான் வடிவமைக்கப்பட்டுள்ளன.
  • நீங்கள் குக்கீஸ்களை ஏற்கவில்லை என்றால் என்ன நடக்கும்? இணையத்தள உரிமையாளர்கள் உங்களை குறித்த இணையத்தளத்தைப் பயன்படுத்த அனுமதிக்காமல் இருக்கக்கூடும் மேலும் சில இணையத்தளங்கள் அதன் அனைத்து உள்ளடக்கத்தையும் அணுக அனுமதிக்காது, அதாவது முழு பயனர் அனுபவத்தை தடுக்கக்கூடும்.

குக்கீஸ்கள் மூலம் சேகரிக்கப்படும் தரவு வகைகள் மற்றும் குக்கீஸ்களை ஏற்றுக்கொள்வதன் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றிய தகவல்களை எங்கள் அடுத்த கட்டுரையை படித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

மூலம்: https://us.norton.com/internetsecurity-privacy-should-i-accept-cookies.html