கடைசியாக புதுப்பிக்கப்பட்டது செப்டம்பர் 22, 2021
கடவுச்சொல் என்றால் என்ன?
எமது பிரத்தியேக உடமைகளை பாதுகாத்துக் கொள்வதற்கு வீட்டிலுள்ள அறைகள் மற்றும் அலுமாரிகளை பூட்டுவதற்கு திறவுக்கோல்களை பயன்படுத்துவதை போன்று இவ் டிஜிட்டல் உலகில் மின்னஞ்சல் கணக்கு, முகப்புத்தகம், யூட்டியூப், லிங்க்ட்இன், டுவிட்டர் மற்றும் அதே போன்று நிகழ்நிலை வங்கி கணக்குகள் என்பவற்றை பாதுகாப்பதற்கு பயன்படுத்தப்படும் டிஜிட்டல் திறவுக்கோல் தான் ‘கடவுச்சொல்’ ஆகும்.
எவரேனும் ஒருவரினால் உங்களது கடவுச்சொல்லை இலகுவில் கண்டறியக்கூடியதாக இருப்பின் என்ன செய்வது?
உங்கள் வீட்டு திறவுகோலை ஒரு பூச்சாடியிலோ அல்லது கம்பளத்திற்கு அடியிலோ மறைத்து வைத்தால் அதனை எவராலும் இலகுவில் கண்டறிய முடியும். அதேபோன்று உங்களது கடவுச்சொல்லும் இலவில் ஊகிக்கக்கூடியதாகவிருப்பின் உங்களது மின்னஞ்சல் கணக்கு, பேஸ்புக் கணக்கையும் திருடுவதற்கும் பல வாய்ப்புகளுள்ளன.
இலகுவில் நினைவில் வைத்துக்கொள்ளக்கூடிய பொதுவாக பயன்படுத்தப்படும் பாதுகாப்பற்ற கடவுச்சொற்கள் எவை?
- .உங்களது பெயருடன் இரண்டு இலக்கங்கள். உதாரணம்: Samantha89
- அடையாள அட்டை இலக்கம். உதாரணம்: 947312100V
- 123456
- தட்டச்சில் காணப்படும் அருகிலுள்ள எழுத்துக்கள். உதாரணம்: ASDF, QWERTY
- தொலைபேசி இலக்கம்
- பிறந்த திகதி
பாதுகாப்பற்ற கடவுச்சொற்களை பயன்படுத்துவதிலுள்ள இடர்பாடுகளிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கு குறிப்பாக மின்னஞ்சலுக்கான கடவுச்சொல்லை அமைப்பதற்கான முறைகள் கீழே வழங்கப்பட்டுள்ளன.
- மிகக் குறைந்த அளவு எழுத்துக்களின் எண்ணிக்கை 8 ஆக இருத்தல்
- ஆங்கில பெரிய மற்றும் சிறிய எழுத்துக்கள் இரண்டையும் பயன்படுத்தல்
- இலக்கங்களை உள்ளடக்குதல்
- குறியீடுகளை உள்ளடக்குதல்
அனைத்து கணக்குகளுக்கும் ஒரே கடவுச்சொல்லை பயன்படுத்தினால் நிகழ்வது என்ன?
- கணக்கொன்றின் தகவல்கள் மூன்றாம் தரப்பினருக்கு கிடைக்கப் பெறும்போது , அவர்கள் ஏனைய அனைத்து கணக்குகளிலுமிருந்தும் தகவலை பெற்றுக் கொள்வர்ர்
- இக்கட்டான சூழ்நிலையில் நீங்கள் கடவுச்சொல்லை வேறொருவருக்கு வழங்கும் போது அந்நபர் உங்களுடைய அனைத்து கணக்குகளையும் அணுகமுடியும்.
இலகுவான முறையில் எவ்வாறு கடினமான கடவுச்சொல்லை உருவாக்குவதென நாங்கள் பார்ப்போம்.
1ம் முறை
ஒரு சொல் அல்லது சொற்களின் சேர்க்கையை பெறுதல் மற்றும் அதனை நினைவில் வைத்ததுக்கொள்ள நினைவக தந்திரத்தை பயன்படுத்தல்.
உதாரணம்: வெடியா கடன நரக லமய் எம நொவே அப்பி
ஒவ்வொரு சொல்லிலுமுள்ள ஒவ்வொரு எழுத்தையும் வேறுபடுத்துக.
[W]adiya [k]adana [n]araka [l]amai [h]ema [n]owe [a]pi [(வெ)டியா (க)டன (ந)ரக (ல)மய் (எ)ம (நொ)வே (அ)ப்பி ]
பின்னர் கீழ்குறிப்பிட்டவாறான எழுத்துக்களின் சேர்க்கையொன்றை நாம் பெறுவோம்.
[W] [k] [n] [l] [h] [n] [a] [(வெ) (க) (ந) (ல) (எ) (நொ) (அ)]
மேற்குறிப்பிட்ட எழுத்துத் தொகுதிக்கிணங்க பொருத்தமான இலக்கத்தையும் எழுத்தையும் தற்பொழுது இடுவோம்.
எமது உதாராணத்திற்கமைய
A என்பதிற்கு பதிலாக @ ஐ பயன்படுத்தலாம்.
லமய் எனும் சொல்லில் ல வை குறிக்கும் (L) ற்கு பதிலாக 1 என்று மாற்றீடு செய்வோம்.
தற்போது எமது கடவுச்சொல் ‘WkN1hn@’ என்பதாகும்.
மேற்குறிப்பிட்ட கடவுச்சொல்லை நினைவில் வைத்துக் கொள்வது சிரமமென்றாலும், ‘வெடியா கடன நரக லமய் எம நொவே அப்பி’ எனும் வாக்கியத்தை நினைவில் கொள்வது இலகுவானதாகும். அதனால் தற்பொழுது மேற்குறிப்பிட்ட இலகுவான கடவுச்சொல்லை வாசித்து தட்டச்சு செய்யலாம்.
முக்கியம்: இச் செயற்பணிக்கு தங்களுக்கு நெருங்கிய சொற்றொடரை பயன்படுத்துவது பொருத்தமானதாகும்.
2ம் முறை
- முதலில் இரண்டு எழுத்துக்களை தெரிவு செய்யுங்கள். உதாரணம்: AA
- இரண்டாவதாக இரண்டு இலக்கங்களை தெரிவு செய்யுங்கள். உதாரணம்: 24
- மூன்றாவதாக குறியீடொன்றை தெரிவு செய்யுங்கள். உதாரணம்:#
AA24# - AA என்பதற்கு பதிலாக, குன்றிய மற்றும் தடித்த எழுத்துக்களை இரண்டையும் பயன்படுத்தி Aa என்று அமைத்துக் கொள்ளுங்கள்.
Aa24# – இதுவே உங்கள் கடவுச்சொல்லின் முதற்பகுதியாகும்.
ற்பொழுது மேற்குறித்த கடவுச்சொல்லை வேறுபட்ட கணக்குகளுக்கு எவ்வாறு பயன்படுத்தலாமென நோக்குவோம்.
முகப்புத்தக கணக்கெனில் – Aa24#Fac
மின்னஞ்சல் கணக்கெனில் – Aa24#Gma or Aa24#MAIL
குறிப்பு: மேற்குறிப்பிட்டதை குறைந்தது 8 எழுத்துக்களால் தங்களது விருப்பத்திற்கேற்ப ஒழுங்கமைத்துக் கொள்ள முடியும்.
இங்கு நீங்கள் முதல் 5 எழுத்துக்களை மாத்திரமே நினைவில் கொள்ள வேண்டும் என்பதுடன் மேற்குறிப்பிட்டதை போன்று வேறுப்பட்ட கணக்குகளுக்கேற்ப கடவுச்சொல்லை மாற்றியமைத்துக் கொள்ள முடியும்.
மேலும் மேற்குறிப்பிட்டதை போன்று தங்களது விருப்பத்திற்கேற்ப கடவுச்சொல்லை மாற்றியமைத்துக் கொள்ள முடியும்.
உதாரணம்: Aa24#Fac -> Fac#24Aa -> 24Aa#Fac
கடவுச்சொல் பற்றிய முக்கியமான வேறு காரணிகள்
- எந்நேரத்திலும் உங்களது கடவுச்சொல்லை எவருக்கும் வழங்க வேண்டாம்.
- அவ்வாறு கடவுச்சொல்லை வழங்கினால் முழுத் தொகுதியையும் மாற்றியமைக்க வேண்டுமென்பதை நினைவிற்கொள்ளுங்கள்.
- பொருத்தமானதெனில், இரண்டு காரணி உறுதிப்படுத்தல் (2FA) அல்லது பலதரப்பட்ட காரணி உறுதிப்படுத்தலை பயன்படுத்தவும்.
இங்கு பாதுகாப்பான கடவுச்சொல்லை பற்றி கற்றுக்கொள்ளுங்கள்.
மூலம்:
https://www.youtube.com/watch?v=CeAchHKO6EE&t=344s
https://www.hithawathi.lk/help-centre/cyber-security-tips/selecting-a-strong-password-and-protecting-it/