கடைசியாக புதுப்பிக்கப்பட்டது மார்ச் 14, 2021
தனிப்பட்ட தகவல் – உங்கள் பெற்றோரின் அனுமதியின்றி தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டாம். அதாவது உங்கள் கடைசி பெயர், வீட்டு முகவரி, பள்ளி பெயர் அல்லது தொலைபேசி எண்ணை நீங்கள் பகிரக்கூடாது.
நினைவில் கொள்ளுங்கள், யாராவது உங்களைப் பற்றிய தகவல்களைக் கேட்பதால், உங்களைப் பற்றிய அனைத்தையும் அவர்களிடம் சொல்ல வேண்டும் என்று அர்த்தமாகாது!
திரைப்பெயர்(Screen name) – உங்கள் திரைப்பெயரை உருவாக்கும்போது, உங்கள் கடைசிப்பெயர் அல்லது பிறந்த திகதி போன்ற தனிப்பட்ட தகவல்களை சேர்க்க வேண்டாம்.
கடவுச்சொற்கள் – உங்கள் கடவுச்சொல்லை உங்கள் பெற்றோரைத் தவிர வேறு யாருடனும் பகிர வேண்டாம். நீங்கள் ஒரு பொது கணினியைப் பயன்படுத்தினால், முனையத்திலிருந்து(terminal) வெளியேறுவதற்கு முன்பு நீங்கள் அணுகிய கணக்குகளிலிருந்து வெளியேறியதை(logout) உறுதிசெய்க.
புகைப்படங்கள் – உங்கள் பெற்றோரின் அனுமதியைப் பெறாமல் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை நிகழ்நிலையில்(online) இடுகையிட(post) வேண்டாம்.
நிகழ்நிலை (Online) நண்பர்கள் – உங்கள் பெற்றோரின் அனுமதி இல்லாவிட்டால் நிகழ்நிலை நண்பரைச் சந்திக்க ஒப்புக்கொள்ள வேண்டாம். துரதிஷ்டவசமாக, சில நேரங்களில் மக்கள் தாங்கள் இல்லாதவர்களாக நடிக்கின்றனர். நீங்கள் நிகழ்நிலையில் படித்த அனைத்தும் உண்மை இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நிகழ்நிலை விளம்பரங்கள்(Online Ads.) – முதலில் உங்கள் பெற்றோருடன் கலந்துரையாடாமல் நிகழ்நிலையில் எதையும் வாங்க வேண்டாம். சில விளம்பரங்கள் இலவச விஷயங்களை வழங்குவதன் மூலமோ அல்லது உங்கள் தனிப்பட்ட தகவல்களைச் சேகரிப்பதற்கான ஒரு வழியாக நீங்கள் எதையாவது வென்றீர்கள் என்று சொல்வதன் மூலமோ உங்களை ஏமாற்ற முயற்சிக்கலாம்.
பதிவிறக்குதல்(Downloading) – மின்னஞ்சல் இணைப்பைத் திறக்க அல்லது மென்பொருளைப் பதிவிறக்குவதற்கு முன்பு உங்கள் பெற்றோருடன் பேசுங்கள். இணைப்புகளில் சில நேரங்களில் வைரஸ்கள் இருக்க வாய்ப்புள்ளது. உங்களுக்குத் தெரியாத ஒருவரிடமிருந்து வரும் எந்த ஒரு இணைப்பையும் ஒருபோதும் திறக்க வேண்டாம்.
கொடுமைப்படுத்துதல் (Bullying) – இழிவான அல்லது அவமதிக்கும் செய்திகளை அனுப்பவோ, பதிலளிக்கவோ வேண்டாம். அவ்வாறான ஒன்றைப் பெற்றால் உங்கள் பெற்றோரிடம் சொல்லுங்கள். நிகழ்நிலையில்(Online) ஏதேனும் ஏற்பட்டு அது உங்களை சங்கடப்படுத்தினால் , உங்கள் பெற்றோருடன் அல்லது பள்ளியில் ஒரு ஆசிரியரிடம் பேசுங்கள்.
சமூக வலைத்தளங்கள் – பல சமூக வலைப்பின்னல் வலைத்தளங்கள் (உ.ம். Facebook, Twitter, Second Life மற்றும் MySpace) மற்றும் வலைப்பதிவு ஹோஸ்டிங் வலைத்தளங்களில் பதிவுபெற குறைந்தபட்ச வயதுத் தேவைகளைக் கொண்டுள்ளன. இந்த தேவைகள் உங்களைப் பாதுகாக்கவே உள்ளன!
ஆராய்ச்சி – ஆராய்ச்சிக்கு பாதுகாப்பான மற்றும் துல்லியமான வலைத்தளங்களைப் பற்றி உங்கள் நூலகர், ஆசிரியர் அல்லது பெற்றோருடன் கலந்துரையாடுங்கள். பொது நூலகம் ஏராளமான வளங்களை வழங்குகிறது. பாடசாலைத் திட்டத்தில் நிகழ்நிலை(Online) தகவல்களைப் பயன்படுத்தினால், உங்களுக்கு தகவல் எங்கிருந்து கிடைக்கப்பெற்றது என்பதை விளக்கி உறுதிசெய்க.
மூலம் : https://www.nypl.org/help/about-nypl/legal-notices/internet-safety-tips