கடைசியாக புதுப்பிக்கப்பட்டது நவம்பர் 29, 2022
இணையவெளி பாதுகாப்பு குறிப்புகள் (பகுதி 1)
ஒன்லைனில் பாதுகாப்பாக இருப்பது
- உங்கள் சுயவிவரத்தை தனிப்பட்டதாக வைத்துக்கொண்டு உங்கள் அமைப்புகளை தவறாமல் சரிபார்க்கவும்.
- தனிப்பட்ட தகவல்களைப் பகிர வேண்டாம், அந்நியர்களிடமிருந்து ஒன்லைனில் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
- நீங்கள் ‘செக்-இன்’ செய்வதற்கு அல்லது இருப்பிட அடிப்படையிலான சேவைகளைப் பயன்படுத்துவதற்கு முன்பாக உங்கள் தனிப்பட்ட பாதுகாப்பைப் பற்றி சிந்தியுங்கள்.
- உங்கள் டிஜிட்டல் நற்பெயரை பொறுப்புடன் நிர்வகிக்கவும்.
- மற்றவர்களை மதித்து ஒருவரை ஒருவர் ஒன்லைனில் கவனித்துக் கொள்ளுங்கள். இணையவெளி மோசடிகள் குறித்த இடுகை இங்கே பார்க்கலாம்.
இணையவெளி அச்சுறுத்தலைக் கையாள்வது
- இணையவெளி அச்சுறுத்தலை தடை செய்தல்.
- இணைய அச்சுறுத்தலுக்கான சான்றாக அதன் திரைப் பிடிப்பை( screenshot ) எடுத்தல்.
- இணையதள நிர்வாகி அல்லது சேவை வழங்குநரிடம் ஆபத்தான விஷயங்களை முறையிடுதல்.
- நண்பர் அல்லது நம்பகரமான வளர்ந்தவருடன் பேசுதல்.
- மறக்க வேண்டாம் .. ஹிதவதி உங்களுக்காக இங்கே இருக்கிறாள்!
மேலதிக தகவலுக்காக பொலிசாரை தொடர்பு கொள்ளவும், டெக்சேர்ட் அல்லது எஸ்.எல்.சி.இ.ஆர்.டிக்கு அழைப்பினை மேற்கொள்ளவும் (மேலதிக தகவல்களை இங்கே பார்க்கலாம்)
பொலிஸ் / டெக்சேர்ட் அல்லது எஸ்.எல்.சி.இ.ஆர்.டி.யின் உதவியைப் பெறுங்கள்: முந்தைய இடுகையை இங்கே காணலாம்…