கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஜூலை 20, 2021
அடுத்தது என்னவாக இருக்கும்?
தொழில்நுட்பம் மேலும் மேலும் முன்னேறும் போது அதனுடன் இணைந்து தவறான பயன்பாடு மற்றும் பாதுகாப்பு சிக்கல்களும் அதிகரிக்கும் என்பது எளிமையான சட்டமாகும் . தொழில்நுட்பம் எதிர் வன்பொருளுக்கு இணக்கமான தன்மையே இந்த விடயமாகும்.
ஆம் – இதற்கு காரணம் 5 ஜி!
பிரையன் போஸ்டர், எஸ்.வி.பி, மொபைல்இரானின் கருத்தின் அடிப்படையில்
“மொபைல் சாதனத்தால் ஏற்படும் தரவு மீறலை பகிரங்கமாக வெளிப்படுத்துவதாக முதலில் 5ஜி அமையும் மிக விரைவான 5ஜி இணைப்பானது சுயமாக செயற்படக்கூடிய கார்கள், ரிமோட் ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் மற்றும் ஒற்றை இலக்க மில்லி செக்கன்களில் முடிவுகளை எடுக்க வேண்டிய பல பயன்பாடுகளுக்கான புதிய திறன்களை செயல்படுத்தும். ஆயினும் இது மொபைல் சாதனங்களில் தரவுகள் இழக்கப்படும் அளவையும் துரிதப்படுத்தும். பாரம்பரிய நிறுவன வலையமைப்புக்கு வகுக்கப்பட்ட சுற்றளவு எல்லையை 5ஜி தொடர்ந்து இல்லாதொழிப்பதுடன் ஃபிஷிங், மேன்-இன்-தி-மிடில் , சாதன கையகப்படுத்துதல் முதலிய பல வகையான தாக்குதல்களைத் தொடங்குவதற்கு ஏதுவான பாதுகாப்பு இடைவெளிகளை சைபர் குற்றவாளிகள் பயன்படுத்திக் கொள்வார்கள்”
வாட்ச்கார்ட்டின் கூற்றுப்படி, ‘தாக்குபவர்கள் 5ஜி / வைஃபை ஹேண்டொவரில் புதிய பாதிப்புகளைக் கண்டுபிடிப்பார்கள்’ என்று கூறப்படுகிறது. வேகம், நம்பகத்தன்மை முதலிய உயர்நிலை அம்சங்களுடன் 5 ஜி வந்தாலும் கூட பொதுவாக பயன்படுத்த கூடியதாகவுள்ள மொபைல் செல்லுலார் வலையமைப்புகள் மற்றும் வைஃபை வலையமைப்புகளின் வழியாக ஸ்மார்ட்போன்கள் பயன்பாட்டில் இருக்கும்போது அல்லது பொது இடங்களில் பாரிய எண்ணிக்கையான மக்களால் அவை அணுகக்கூடியதாக இருக்கும்போது 5 ஜியில் இருந்து வைஃபைக்கான பாதுகாப்பு பாதிப்பு சிக்கல் பாரிய அளவினதாக இருக்கலாம் என்பதை இது விளக்குகிறது. 5ஜி மொபைல் போன்களின் குரல் அல்லது தரவை தாக்குதல் நடத்துபவர்கள் அணுகலாம்.
தரவு மீறல்களில் பெரும்பாலானவை தொலைதொடர்பு, மொபைல் சாதனங்கள் மற்றும் வளாகத்திற்கு வெளியே உள்ள சொத்துக்களை உள்ளடக்கியதாக இருக்கும் என்று அறிக்கை கணித்துள்ளது.
குறிப்பிடல்:
https://www.forbes.com/sites/gilpress/2019/12/03/141-cybersecurity-predictions-for-2020/#19340fae1bc5
https://www.watchguard.com/wgrd-resource-center/predictions-2020