கடைசியாக புதுப்பிக்கப்பட்டது செப்டம்பர் 6, 2024

சைபர் பாதுகாப்பு புத்தகத்தைப் படித்து கீழே உள்ள கேள்விகளுக்கு சரியாக பதிலளிக்கவும்.

  1. உங்கள் தொலைபேசியை விற்பதற்கு முன், அதன் தரவுகளைப் பாதுகாப்பதற்காக மேற் கொள்ள வேண்டிய சரியான நடவடிக்கையைத் தெரிவு செய்யவும்.
    1. தொலைபேசியின் கடவுச்சொல்லை மாற்றுதல்.
    2. எல்லா தரவுகளையும் அழித்து விடுவதற்கு Factory reset செய்தல்
    3. வால்பேப்பரை மாற்றுதல்
    4. சிம் அட்டையினை அகற்றுதல்
  2. இணையத்தின் ஊடாக யாராவது உங்களை திட்டினால், நீங்கள் அதற்கு உடனடியாக பதிலளிக்க வேண்டுமா​?
    1. ஆம்
    2. இல்லை
  3. கீழ்வருவனவற்றில் ஹிதாவதி அமைப்பால் நிறைவேற்றப்படாதது எது?
    1. பெண் பிள்ளைகளுக்கு மட்டும் உதவியளித்தல்
    2. ஆலோசனை சேவைகளை வழங்குதல்
    3. சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு உதவுதல்
    4. அழைப்புச் சேவையொன்றை நடத்திச் செல்லல்
  4. இரட்டைக் காரணி அங்கீகாரம் (Two-factor Authentication / 2FA) என்றால் என்ன?
    1. ஒரு தீங்கு மென்பொருள்
    2. ஒரு குறுஞ் செய்தி
    3. ஃபிஷிங்கிற்காக அனுப்பப்படும் செய்தியொன்று
    4. கடவுச்சொல்லுக்கு மேலதிகமாக தனித்துவத்தை உறுதிப்படுத்தும் ஒரு முறையாகும்
  5. உங்கள் புகைப்படத்தை அனுமதியின்றி வெளியிட்டிருந்தால் அதற்கு எதிராக எடுக்கக் கூடிய சிறந்த நடவடிக்கை என்ன?
    1. கருத்து (கமென்ட்) தெரிவிப்பதன் ஊடாக திட்டுதல்
    2. மெசேஜ் செய்து அதை நீக்கச் சொல்லுவது
    3. புகாரளித்த பின்னர் ஹிதாவதி அமைப்புக்கு தெரியபடுத்துதல்
    4. நிரந்தரமாக சமூக வலையமைப்புக்களின் பாவனையைத் தவிர்த்தல்
  6. வலுவான இரகசிய குறியீடு என்பது?
    1. உங்களது தொலைபேசி இலக்கம்
    2. உங்கள் பிறந்த தினம்
    3. வாக்கியத்தில் முதலெழுத்துக்கள் மற்றும் எண்களின்
      கலவை
    4. பெயருக்கு முன்னால் 123 என குறிப்பிடல்
  7. நிகழ்நிலையில் சிறுவர் மற்றும் இளைஞர்கள் முகங்கொடுக்கின்ற அபாயம் அல்லாதது
    1. சைபர்புல்லிங்
    2. இணையத்திற்கு அடிமையாதல்
    3. சைபர் குற்றங்களுக்கு உட்படுதல்
    4. இணையத்தினூடான கற்றல்
  8. இணைய உலாவல் தொடர்பான தவறான கூற்று
    1. குற்றச் செயல்களில் ஈடுபடுகின்ற போலிக் கணக்கொன்றின்
      பின்னணியில் உள்ள நபரை கண்டுபிடிக்க முடியாது
    2. நாம் அறிந்தயாத பல விடயங்களை இணையத்தினூடாக கற்க
      முடியும்.
    3. சிலர் இணையத்தை தவறாகப் பயன்படுத்தி மற்றவர்களை ஏமாற்றி
      துஷ்பிரயோகம் செய்கின்றனர்.
    4. இணையவெளியில் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும்
      என்பதனை ஹித்தவத்தி உங்களுக்கு அறியப்படுத்துகிறது.
  9. இணையம்/ சமூக ஊடகம் அடிமையானதல் பற்றிய தவறான கூற்றைத் தெரிவுசெய்யவு
    1. குக்கிஸ் மூலம் வியாபாரிகள் இணையத்தில் நீங்கள் பார்வையிடும் இணையத்தளங்களையும் விருப்பங்களையும் வணிகர்கள் இனங்காண்கின்றனர்.
    2. சமூக ஊடகம்/ இணையம் உங்களை எல்லாச் சந்தர்ப்பங்களிலும் நன்மைகளை செய்ய ஊக்கமளிக்கின்றன.
    3. கடந்த காலத்தில் நீங்கள் தேடிய விடயத்துடன் தொடர்புடைய கவர்ச்சிகரமான விளம்பரங்கள்/ முன்மொழிவுகள் இன்னும் தோன்றலாம்.
    4. சமூக வலைப்பின்னலானது எமது மனத்தின் செயற்பாடுகளை
      அவதானித்து கவனம் செலுத்த முயற்சிக்கின்றன.
  10. இணைப்புகளை லிங்க்ஸ் அழுத்தும் போது அல்லது இணைப்பினை பதிவிறக்கம் செய்யும் போது நீங்கள் ஏன் கவனமாக இருக்க வேண்டும்
    1. அவை உங்கள் கணினியை பாதிக்கின்ற வைரஸ்களைக்
      கொண்டிருக்கலாம்.
    2. அவை பொருத்தமற்ற விடயங்களை உள்ளடக்கியிருக்கலாம்.
    3. இதன் மூலம் உங்கள் கணனியின் தகவல்களைத் திருடுவதற்கும்
      வாய்ப்புள்ளது.
    4. மேற்குறிப்பிட்ட அனைத்தும்

பதில்கள்
(1-b, 2-b, 3-a, 4-d, 5-c, 6-c, 7-d, 8-a, 9-b, 10-d)