கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஏப்ரல் 25, 2024

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களும் இடங்களும் கற்பனையானவை

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிஷி, கபிலவுடன் உறவினைக் கொண்டிருந்தார், ஆனால் அதே உணர்வுகளை கபில வேறொரு பெண்ணுடன் ரகசியமாக பகிர்ந்து கொண்டமையை கண்டுபிடித்த பிறகு கபிலவை பிரிந்துவிட்டார். பின்னர், சில காரணங்களால் அந்தப் பெண்ணும் கபிலவை விட்டு வெளியேறிவிட்டார், ஆகவே நிஷியிடம் மன்னிப்புக் கோரிய கபில அவரை தன்னிடம் திரும்பி வரச் சொன்னார்.

ஆயினும் அந்த நேரத்தில் நிஷி வேறொருவருக்கு வாக்குக் கொடுத்துவிட்டு அவரை திருமணமும் செய்து கொள்ளவிருந்தார். ஆகவே தனது நிலைமையை கபிலாவிடம் விளக்கியபோது, இதைக் கேட்ட கபில பொறாமை மற்றும் கோபத்தை உணர்ந்தார். அந்த திருமணத்தை நிறுத்துவதன் மூலமாக நிஷியை உதவியற்றதாக்கி கடந்த காலத்தைப் போலவே மீண்டும் ஒன்றாக இருக்க இருவருக்கும் வாய்ப்பளிக்கும் என்று கபிலா நினைத்தார்.

அவர்கள் முன்பு எடுத்த நெருக்கமான படங்களை கபில சேமித்து வைத்திருந்தார். நிஷியின் பெயரை பயன்படுத்தி ஒரு போலி இன்ஸ்டாகிராம் கணக்கை உருவாக்கி அதில் தவறான எண்ணத்தை உருவாக்கக் கூடிய தலைப்புகளைக் கொண்ட அனைத்து படங்களையும் பதிவேற்றியதுடன் அந்தக் கணக்கில் நிஷியின் பெரும்பாலான நண்பர்கள், உறவினர்களை தொடர்ந்தார். கணக்கின் புதுப்பிக்கப்பட்ட சுயவிவர பக்கத்தை “மற்றவர்கள் என்ன சொன்னாலும் என் கபிலாவுடன் மகிழ்ச்சியுடன் வாழ்கிறேன்” என்பதாக அமைத்துக் கொண்டார்.


ஒரு நண்பர் மூலமாக இதைப் பற்றி அறிந்த நிஷி பெரிதும் வருத்தப்பட்டார். விரைவில் மணமகளாக வேண்டும் என்று கனவு கண்டிருந்த நிஷிக்கு இதனால் சமுதாயத்தை எதிர்கொள்வது மிகவும் சங்கடமாக இருந்தது. உண்மையில் என்ன நடந்தது என்பதை தன்னை நன்றாக புரிந்து கொண்டிருந்த தனது வருங்கால கணவரிடம் சொல்வதைத் தவிர அவருக்கு வேறு தெரிவு இருக்கவில்லை. வருங்கால கணவர் நிஷியிடம் இது தொடர்பில் முறைப்பாடு செய்து உதவியைப் பெறுவதற்கு உடனடியாக ‘ஹிதவதியை’ தொடர்பு கொள்ளுமாறு கூறினார்.

அதன்படி, நிஷி ஹிதவதியை அழைத்து, தன்னைப் போலவே ஆள்மாறாட்டம் செய்த போலி கணக்கை அகற்ற அவர்களின் உதவியைப் பெற்றார். மேலும் இணையத்தில் தனது உயிரைக் காப்பாற்றுவதற்கு உதவியளித்த ஹிதாவதிக்கு அவர் நன்றியையும் தெரிவித்தார். இறுதியாக அவர் கபிலாவிலிருந்து விடுபட்டு, தான் கீழே விழுந்து கிடந்த போது ஹிதவதியை அறிமுகப்படுத்த உதவிய நபரையே மணந்தார்

முன்னெச்சரிக்கை உதவிக்குறிப்புகள்:

 

    • https://www.hithawathi.lk/ta/help-center-ta/social-media/instagram-ta/how-do-you-report-a-fake-account-impersonating-you-pretending-to-be-you-on-instagram மூலமாக அல்லது ஹிதவதியின் உதவியுடன் போலி இன்ஸ்டாகிராம் கணக்குகளை பற்றி உடனடியாகப் முறைப்பாடு செய்யுங்கள்.
    • இதற்குப் பின்னால் உண்மையில் யார் இருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடித்து, அந்த நபரை தண்டிக்க வேண்டும் எனில் (சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ) நீங்கள் பொலிஸ் நிலையத்திற்குச் செல்ல வேண்டும், அங்கு நீங்கள் முறைப்பாட்டை அளிக்க வேண்டும் அல்லது telligp.police.lk வழியாக ஒன்லைனில் பொலிஸ் முறைப்பாட்டினை செய்யுங்கள். (வகையை ‘சைபர்-க்ரைம்’ என தேர்ந்தெடுத்து ஆதாரங்களை இணைக்கவும்).