கடைசியாக புதுப்பிக்கப்பட்டது மார்ச் 14, 2021
அச்சுறுத்தல் மட்டம்
உயர்வானது
மேலோட்டம்
பல உயர் பாதுகாப்பு குறைபாடுகளை சீர்செய்து விண்டோஸ், மக் மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களுக்கான குரோம் உலாவியின் புதிய பதிப்பை கூகிள் வெளியிட்டுள்ளது.
விளக்கம்
கூகிளது பாதுகாப்பு ஆலோசனையின்படி, பல்வேறு பாதுகாப்பு நிபுணர்களால் அடையாளம் காணப்பட்ட பல உயர் பாதுகாப்பு குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் குரோம் உலாவிக்கான பாதுகாப்பு சீரமைப்பினை கூகுள் வெளியிட்டுள்ளது.
இந்த பாதிப்புகளை வெற்றிகரமாக நீக்குவதன் மூலம் பாதிக்கப்படக்கூடிய குரோம் உலாவி இயங்கும் கணினிகளில் தன்னிச்சையான குறியீடுகளை செயற்படுத்துவதற்கு தாக்குபவரை அனுமதிக்கும். இணையப்பாதுகாப்புக்கான நிலையத்தின் (சிஐஎஸ்) செயலியுடன் தொடர்புடைய சலுகைகளைப் பொறுத்து, தாக்குபவர் கணினியில் தரவைப் பார்க்கலாம், மாற்றலாம் அல்லது நீக்கலாம்.
குரோமின் இணையஒலிக்கூறு (CVE-2020-6450 மற்றும் CVE-2020-6451), குவியல் அடிப்படையிலான இடையக வழிவு (CVE-2020-6452) மற்றும் சிக்கலான CVE- 2020-6457 என்பன சீரமைப்பின் போது கவனிக்கப்படும் சில மிகக் தீவிரமான குறைபாடுகளாகும்.
தாக்கம்
- உங்கள் கணினிக்கு அங்கீகரிக்கப்படாத அணுகல்
- தீம்பொருள் விநியோகம்
- உங்கள் அன்றாட நடவடிக்கைகளுக்கு இடையூறு
- பயனர்பெயர்கள், கடவுச்சொற்கள் போன்ற உங்கள் தனிப்பட்ட தகவல்களை வெளிப்படுத்துதல்
தீர்வு / பணித்தொகுப்புகள்
விண்டோஸ், மக் மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களுக்கு கூகுள் குரோம் உலாவியின் மிகப்பிந்திய பாதுகாப்பு சீரமைப்பு 81.0.4044.113V ஐப் பயன்படுத்துக
குறிப்பு
https://chromereleases.googleblog.com/2020/04/stable-channel-update-for-desktop_15.html
https://www.forbes.com/sites/gordonkelly/2020/04/18/google-chrome-81-critical-security-exploit-upgrade-warning-update-chrome-browser/#757dIfe76bde
பொறுப்புத் துறப்பு
இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் எந்தவொரு வகையிலான உத்தரவாதமும் இல்லாமல் ” இருப்பது போலவே ” தரப்பட்டுள்ளன.
மூலம்
https://www.facebook.com/photo.php?fbid=10220031571813700&set=a.1170814284622&type=3&theater (#REF: 109 #Re1eased on: 21/04/2020)
https://www.google.com/chrome/