கடைசியாக புதுப்பிக்கப்பட்டது டிசம்பர் 1, 2020
அனைத்து தகவல் தொடர்புகளுக்கும் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரையான குறிமுறையாக்கத்தைக் கொண்டுவருவதில் வட்ஸ்அப் அற்புதமான சாதனையைச் செய்துள்ளது.
- வட்ஸ்அப் உங்கள் கேமராவை அணுகுவதை உறுதிசெய்க. நீங்கள் நிறுவும் போது இதை ஏற்கனவே அனுமதித்திருக்கலாம்
- வட்ஸ்அப்பில் உங்கள் நண்பருடனான உரையாடலைத் திறந்து, அந்த உரையாடலில் மேலே நபரின் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்.
- இது அந்த நபருக்கான தொடர்பு சாளரத்தைத் திறக்கும். அந்தத் திரையின் அடிப்பகுதியில் நீங்கள் காணும் அமைப்பில்
- குறிமுறையாக்க புலத்தில் தட்டுவதுடன் QR குறியீட்டைக் காண்பிக்கும் திரையையும், அந்த QR இன் உள்ளடக்கங்களைக் குறிக்கும் 60 இலக்க தசம குறியீட்டையும் நீங்கள் பார்ப்பீர்கள்.
- QR குறியீடு திரையின் அடிப்பகுதியில், உங்கள் நண்பரின் குறியீட்டை ஸ்கேன் செய்ய உதவும் ஒரு இணைப்பு உள்ளதுடன் அவர்களாலும் இதை உங்களுக்கு செய்ய முடியும்.
வட்ஸ்அப்பில் பாதுகாப்பு அமைப்புகளை கட்டமைப்பதற்கான படிகள்
-> Settings -> Accounts -> Security -> enable the QR code
மூலம்: தகவல் பாதுகாப்பு பற்றிய கையேடு, இலங்கை கணினி அவசரகால தயார்நிலைக் குழு – ஒருங்கிணைப்பு மையம் (Handbook on Information Security, Sri Lanka CERT – CC)