கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஆகஸ்ட் 20, 2024


இணையப் பாதுகாப்பில் செயற்கை நுண்ணறிவு (AI) என்பது, இணைய அச்சுறுத்தல்களிலிருந்து டிஜிட்டல் முறைமைகள் மற்றும் தரவுகளின் பாதுகாப்பை மேம்படுத்த AI தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை உள்ளடக்குகிறது. AI ஆனது இணையம் தொடர்பான தாக்குதல்களைச் சிறப்பாகக் கண்டறிவதற்கு, தடுப்பதற்கு மற்றும் பதிலளிப்பதற்காக இயந்திரக் கற்றல் (machine learning) மற்றும் நரம்பு பின்னலமைப்பு (neural networks) போன்ற முறைகளைப் பயன்படுத்துகிறது. வழமைக்கு மாறான செயல்பாடுகளைக் கண்டறிவதற்கு, சாத்தியமான அச்சுறுத்தல்களைக் கண்டறிவதற்கான நடத்தையை பகுப்பாய்வு செய்வதற்கு மற்றும் பாதுகாப்புச் சிக்கல்களை விரைவாகக் கண்டறிந்து அவற்றைத் தீர்க்க நிகழ்நேர கண்காணிப்பை வழங்குவதற்கு சாதாரண வலையமைப்பு நடத்தை எப்படி இருக்கும் என்பதைக் கற்றுக்கொள்வதன் மூலம் இது உதவுகிறது.

இணைய பாதுகாப்பில் செயற்கை நுண்ணறிவின் முக்கியத்துவம்

 
• சிறந்த அச்சுறுத்தலைக் கண்டறிதல்: பாரம்பரிய முறைகளால் தவறவிடக்கூடிய வழமைக்கு மாறான செயல்பாடுகள் மற்றும் சாத்தியமான அச்சுறுத்தல்களைக் கண்டறிய AI பாரிய அளவிலான தரவுகளை விரைவாக ஆய்வு செய்கிறது.
• விரைவாகப் பதில் வழங்குதல்: AI இனால் சில இணையச் சம்பவங்களைத் தன்னியக்கமாகக் கையாளவும், எதிர்வினை நேரத்தை விரைவுபடுத்தி மற்றும் சேதத்தைக் குறைக்கவும் முடியும்.
• செயல்திறன் மிக்க பாதுகாப்பு: AI சாத்தியமான எதிர்கால அச்சுறுத்தல்களை முன்னறிவிக்கிறது, இது நிறுவனங்களை தங்கள் பாதுகாப்பை தயார் செய்து வலுப்படுத்த அனுமதிக்கிறது.
• சிக்கலை நிர்வகித்தல்: சிக்கலான இணைய அச்சுறுத்தல்களை மிகவும் திறம்படப் புரிந்துகொள்வதற்கு மற்றும் நிவர்த்தி செய்வதற்கு AI இனால் பல்வேறு தரவு மூலங்களைப் பகுப்பாய்வு செய்ய முடியும்.
• பாதுகாப்புக் குழுக்களுக்கு குறைவான பணிச்சுமை: AI மீண்டும் மீண்டும் செய்ய வேண்டிய பணிகளைக் கையாள்கிறது, இது இணையப் பாதுகாப்பு நிபுணர்களை மிக முக்கியமான பணிகளில் கவனம் செலுத்த உதவுகிறது.
• அளவிடக்கூடிய தன்மை: டிஜிட்டல் வலையமைப்புகள் வளரும்போது தரவு மற்றும் சாதனங்களின் அதிகரிப்பின் அளவை நிர்வகிக்கவும், வலுவான பாதுகாப்பை உறுதிசெய்யவும் AI இனால் முடியும்.
• தொடர்ச்சியான கற்றல்: புதிய தரவு மற்றும் கடந்தகால சம்பவங்களிலிருந்து கற்றுக்கொள்வதன் மூலம் AI காலப்போக்கில் மேம்படுகிறது, வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களுடன் புதுப்பித்த நிலையில் உள்ளது.

ஒட்டுமொத்தமாக, AI ஆனது வேகமான, துல்லியமான மற்றும் அளவிடக்கூடிய பாதுகாப்புத் தீர்வுகளை வழங்குவதன் மூலம் டிஜிட்டல் சொத்துக்களைப் பாதுகாக்க உதவுகிறது.

நிறுவனங்கள் தங்கள் இணையப் பாதுகாப்புக் கொள்கையில் AI இனை எவ்வாறு பயன்படுத்தலாம்

 
• தேவைகளைச் சரிபார்க்கவும் – இணையப் பாதுகாப்பில் உங்கள் நிறுவனத்திற்கு என்ன தேவை என்பதை மதிப்பீடு செய்து, AI எங்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதைப் பார்க்கவும்.
• இலக்குகளை அமையுங்கள் – அச்சுறுத்தல்களை வேகமாகக் கண்டறிவது அல்லது பதில் வழங்குவதனைத் தானியங்குபடுத்துவது போன்று AI என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கவும்.
• சரியான நபர்களைப் பெறுங்கள் – AI மற்றும் இணையப் பாதுகாப்பில் திறன்களை வளர்த்துக் கொள்ள நிபுணர்களை நியமிக்கவும் அல்லது இருக்கும் ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கவும்.
• தரவைத் தயாரிக்கவும் – உங்கள் தரவு நல்ல தரத்தில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், ஏனெனில் AI அதைச் சார்ந்து நன்றாகச் செயல்படும். மேலும் அதை பாதுகாப்பாகவும் தனிப்பட்டதாகவும் வைத்திருங்கள்.
• AI கருவிகளைத் தேர்ந்தெடுங்கள் – உங்கள் இணையப் பாதுகாப்புத் தேவைகளுக்குப் பொருந்தக்கூடிய AI கருவிகளைத் தேர்ந்தெடுத்து உங்களின் தற்போதைய முறைமைகளுடன் பணியாற்றுங்கள்.
• முதலில் பரிசோதியுங்கள் – உங்கள் நிஜ-உலக அமைப்பில் AI எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பார்க்க சிறிய பரிசோதனைகளுடன் ஆரம்பிக்கவும் அத்துடன் தேவையான மாற்றங்களையும் செய்யுங்கள்.
• ஒருங்கிணைத்தல் மற்றும் கண்காணித்தல் – உங்களிடம் ஏற்கனவே உள்ள முறைமைகளுடன் AI இனை இணைத்து, அது எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் கண்காணிக்கவும். கருத்து மற்றும் புதிய அச்சுறுத்தல்களின் அடிப்படையில் மேம்பாடுகளைச் செய்யுங்கள்.

 

ஆதாரங்கள்:

https://www.engati.com/blog/ai-in-cybersecurity
https://www.eccu.edu/blog/technology/the-role-of-ai-in-cyber-security/
https://www.ccslearningacademy.com/role-of-ai-in-cyber-security/