கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஏப்ரல் 25, 2024

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்கள் மற்றும் இடங்கள் யாவும் கற்பனையாகும்.

திமந்தா அவசரமாக ஹிதாவதியை அறிவுரைக்காக அழைத்தார், ஏனெனில் அவர் தனது அம்மா சூழ்ச்சியில் அகப்பட்டுக் கொண்டார் என்று நினைத்தார். உடனடியாக என்ன செய்வது என்று அறிய அவர் விரும்பினார். திமந்தா தனது அம்மா எதிர்கொண்ட சூழ்நிலையை விளக்குவதை ஹிதாவதி கவனமாகக் கேட்டது.

திமந்த: எனது தாய் பொதுவாக தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் சமூக ஊடகங்களின் பாவனைகளுக்கு மட்டுமே தொலைபேசியை உபயோகிக்கின்றதோடு அவருக்கு தொலைபேசியுடனான பரீட்சியம் குறைவாகும்.

ஹிதவாதி: சரி, என்ன நடந்தது?

திமந்த: நான் எனது பழைய கேமரா ஒன்றை விற்பதற்காக எனது தொலைபேசி இலக்கத்துடன் xxxx.lk இல் விளம்பரம் ஒன்றை பதிவிட்டேன். குறித்த பொருளை வாங்குவதற்காக, கண்டியிலிருந்து ஒருவர் தொடர்புகொண்டார். உடனடியாக பணம் தேவைப்படுவதனால் நானும் அவரின் தொடர்பினை எண்ணி மகிழ்ச்சியடைந்தேன்.

பொருளை வாங்குபவருடன் இடம்பெற்ற உரையாடலைப் பற்றி திமந்த விளக்கமாக கூறினான்.

வாங்குபவர்: நான் பணத்தை xxxxxx வங்கிக் கணக்கிற்கு மாற்றீடு செய்யலாமா? என்னிடம் xxxxxx கணக்கு காணப்படுவதால் இது எனக்கு வசதியாக இருக்கின்றது.

திமந்த: என்னிடம் இல்லை. ஆனால்… சற்றுப் பொறுங்கள் எனது தாயிடம் xxxxxx வங்கியில் கணக்கு காணப்படுகின்றது

Buyவாங்குபவர்er: நன்று, கணக்கு விபரங்கள் மற்றும் உங்களது தாயின் தொலைபேசி இலக்கத்தையும் அனுப்பிவிடுங்கள்.

திமந்த, குறித்த பொருளை வாங்குபவருக்கு அவர் கேட்ட அனைத்து தகவல்களையும் வழங்கியதாக குறிப்பிட்டிருந்தார்.

திமந்த வீட்டில் இல்லாத வேளையில் அவரது தாய்க்கு தெரியாத நபர் ஒருவரிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. அக்குறுஞ்செய்தியில், “உங்களுக்கு பணம் கிடைக்கப்பெற்றுள்ளதா என்பதை சரிபார்க்கவும்?” என்பதோடு ஒரு இணைப்பும் வந்தது. அவள் தயக்கமின்றி அதனை கிளிக் செய்தாள்

உடனடியாக அவளுக்கு ஒரு அழைப்பு வந்தது. தொலைபேசியில் மறுமுனையில் இருந்த நபர், அவளுக்கு கிடைக்கப்பெற்ற குறியீடு/OTP ஐ பகிரும்படி கேட்டார். துரதிஷ்டவசமாக, திமந்தவின் தாய் அறிமுகமில்லாத அழைப்பாளருக்கு மாற்றீடு செய்யப்பட்ட பணம் பற்றிய மேலதிக தகவல்களை அறிந்துகொள்ளும் நோக்கில் குறியீட்டை கூறினாள்.
சிறிது நேரம் கழித்து திமந்தவின் தாய்க்கு xxxxxx வங்கியிலிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் அவரது கணக்கிலிருந்து அனைத்து பணமும் எடுக்கப்பட்டதாகவும், 1000 ரூபாய் மட்டுமே மீதமுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

திமந்த இந்த துரதிஷ்டவசமான சம்பவத்தை பகிர்ந்து கொண்டபின், அடுத்து என்ன செய்ய வேண்டும் என கேட்டார். தற்போது அடிக்கடி இடம்பெறும் மோசடிகள் பற்றி விளக்கியதோடு, திமந்தவின் தாய் பாதிக்கப்பட்ட குறித்த மோசடி பற்றியும் ஹிதவதி விளக்கியது.

தொலைபேசி அழைப்பு அல்லது மின்னஞ்சல் மூலம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் சமூக ஊடகப்பிரிவை தொடர்பு கொள்ளுமாறு ஹிதவாதி திமந்தவிற்கு அறிவுறுத்தியது
.

முன்னெச்சரிக்கை குறிப்புக்கள்:

  • உங்கள் தரவுகள் மற்றும் அடையாளத்தை திருட/ தவறாக பயன்படுத்த மோசடி செய்பவர்கள் அனுப்பும் சந்தேகத்திற்கிடமான அல்லது சரிபார்க்கப்படாத இணைப்புக்களை கிளிக் செய்ய வேண்டாம்.
  • உங்கள் OTP இலக்கம், இரகசிய குறியீடுகள் போன்ற நம்பகமான தகவல்களை யாரிடமும் பகிர வேண்டாம்.
  • சைபர்-ஸ்கேம், சைபர் துன்புறுத்தல் அல்லது இணையம் தொடர்பான வேறு ஏதேனும் பிரச்சனையில் உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், வழிகாட்டுதலுக்காக ஹிதவதியை அணுகவும்.
  • பண மோசடியை நீங்கள் எதிர் கொண்டால், குற்றப் புலனாய்வுத் துறையின் (சிஐடி) கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவை (CCID) அணுகவும் (தொலைபேசி: 011 238 1045 , மின்னஞ்சல்: dir.ccid@police.gov.lk) அல்லது அவசர பொலிஸ் பிரிவை தொடர்பு கொள்ளவும் -119, பொலிஸ்மா அதிபரிடம் சொல்லுங்கள் – telligp.police.lk , இணையதளம்: www.police.lk)).