கடைசியாக புதுப்பிக்கப்பட்டது மார்ச் 11, 2021
யாகுமெயில் /வைமெயில்
ஜிமெயில்
கொட்மெயில்
ஏஓஎல்
எம்எஸ்என்
காம்காஸ்ட்
வெரிசோன்
மேலதிக தகவல்கள்: http://en.wikipedia.org/wiki/Email
உங்கள் மின்னஞ்சல் கணக்கைப் பாதுகாக்க உங்களால் என்ன செய்ய முடியும் என்று பார்ப்போம்.
முதலாவது விடயம் ஒருவரின் மின்னஞ்சல் அவரது தனிப்பட்ட சொத்தாகும் . உங்கள் உள்நுழைவு விவரங்களை வெளியாட்கள் / பிற நபர்களுக்கு வெளிப்படுத்தாதது சிறந்த ஒரு நடைமுறையாகும்.
கடவுச்சொல்
கடவுச்சொற்கள் இணைய குற்றவாளிகளுக்கு எதிரான பாதுகாப்பில் முதல் வரிசையாகும். உங்கள் ஒவ்வொரு முக்கியமான கணக்குகளுக்கும் வேறுபட்ட வலுவான கடவுச்சொற்களைத் தேர்ந்தெடுப்பதும் உங்கள் கடவுச்சொற்களை தவறாமல் புதுப்பிப்பதுவும் நல்லது. எடுத்துக்காட்டு மின்னஞ்சல் கணக்குகளும் ஒன்லைன் வங்கி அமைப்புகளும் இந்த குறிப்புகளைப் பின்பற்றி வலுவான கடவுச்சொற்களை உருவாக்கி தங்களை பாதுகாப்பாக வைத்துள்ளன .
மின்னஞ்சல் மற்றும் ஒன்லைன் வங்கி போன்ற உங்கள் ஒவ்வொரு முக்கியமான கணக்குகளுக்கும் தனித்துவமான கடவுச்சொல்லைப் பயன்படுத்தவும்.
எண்கள், எழுத்துக்கள் அமைப்புக்களால் ஆன நீண்ட கடவுச்சொல்லைப் பயன்படுத்தவும்.
உங்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு சொற்றொடரைப் பயன்படுத்த முயற்சிக்கவும்.
உங்கள் கடவுச்சொல் மீட்பு தெரிவுகளை அமைத்து அவற்றை புதுப்பித்த நிலையில் வைத்திருங்கள். உதாரணமாக பெரும்பாலான மின்னஞ்சல் சேவை வழங்குநர்கள் இதற்காக உங்கள் கைத்தொலைபேசி அல்லது ஏனைய மின்னஞ்சல் கணக்கினை பயன்படுத்துவதற்கு உதவுகின்றன.
உங்கள் அஞ்சல் அமைப்புகளைச் சரிபார்க்கவும்
நீங்கள் விரும்பாதவிடத்து உங்கள் மின்னஞ்சல் அனுப்பப்படுவோ அல்லது ஏனையோரோடு பகிரப்படவோ மாட்டாது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்
உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டால், உங்கள் கணக்கிற்கு மீள திரும்புவதற்கு உங்களுக்கு ஒரு வழி அவசியம்
உங்கள் கணக்கில் அசாதாரண அணுகல் அல்லது செயல்பாட்டைச் சரிபார்க்கவும் (தெரிந்த / தெரியாத நபருக்கு உங்கள் அனுமதி இல்லாமல் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளமை முதலியவை
மூலம் : www.google.com/goodtoknow