கடைசியாக புதுப்பிக்கப்பட்டது பிப்ரவரி 27, 2023
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்கள் மற்றும் இடங்கள் கற்பனையானவை.
பிரபாஷ் வேலை முடிந்து தனது நண்பர்களுடன் சுற்றிக் கொண்டிருந்தார், அவர்கள் நேரம் போவதை உணரவில்லை. நள்ளிரவை நெருங்கிய இருள் சூழ்ந்த நாளாக அது காணப்பட்டது. பிரபாஷும் அவனது மூன்று நண்பர்களும் ஒரு முச்சக்கர வண்டியை எடுத்துக்கொண்டு வீட்டை அடைய நினைத்தனர். அவர்கள் அனைவரும் ஒரு முச்சக்கர வண்டியில் ஒவ்வொரு நண்பரையும் அவரவர் வீட்டில் இறக்கிவிட்டனர். ஓரத்தில் பிரபாஷ் அமர்ந்திருந்தான்.
நண்பர்கள் அனைவரையும் இறக்கி விட்டு வீட்டிற்கு வந்த பிரபாஷ் தெலைபேசியில் தனது நண்பர்களை அழைத்து தான் வீட்டிற்கு வந்ததை அறிவிக்க விரும்பினான். அவன் தனது கையடக்க தொலைபேசியினை எல்லா இடத்திலும் தேடினான் ஆனால் அதை காணவில்லை. அவனோ கொஞ்சம் குடிபோதையிலிருந்ததால் தொலைபேசியைத் தேடுவதை விட்டுவிட்டு தூங்கினான்.
மறுநாள் காலை எழுந்தவுடன் பிரபாஷ் மீண்டும் தனது தெலைபேசியினை தேடத் தொடங்கினான், ஆனால் அது எங்குமே கிடைக்கவில்லை. நேற்று இரவு தனது தொலைபேசி தொலைந்து போனதை உணர்ந்தார். அது சமீபத்தில் ரூ.40,000/-க்கு வாங்கிய புத்தம் புதிய ஸ்மார்ட்போன் என்பதால் சற்று வருத்தப்பட்டார்.
குறித்த தொலைந்து போன கையடக்க தொலைபேசியினை உபயோகித்து, பிரபாஷ் தனது அனைத்து சமூக ஊடக கணக்குகளிலும் மின்னஞ்சல் கணக்கிலும் உள்நுழைந்துள்ளதால் மிகவும் கவலைப்பட்டு தனது சகோதரியிடம் இந்த சம்பவத்தைக் கூறினார். போலீசுக்குச் சென்று புகார் இடும் படி அவள் அறிவுறுத்தினால், ஆனால் அவனின் பதில்;
“காவல் நிலையங்களில் வீணடிக்க எனக்கு நேரமில்லை, கவனக்குறைவாக இருப்பது என் தவறும் கூட. நான் ஒரு சின்ன தொலைப்பேசி வாங்க போகிறேன்”
இருப்பினும், பிரபாஷின் சகோதரி அதை எளிதில் விட்டுவிட விரும்பவில்லை. அன்று மாலை அவள் பேஸ்புக் நோட்டிஃபிகேஷன்களை சரிபார்த்துக்கொண்டிருந்தபோது, ஹிதவதியின் FB பக்கத்திலிருந்து ஒரு தகவலைப் பார்த்தாள். தொலைந்து போன தொலைபேசியைக் கண்டுபிடிக்க ஏதாவது வழி இருக்கிறதா என்று கேட்டு அவர்களுக்கு மெசேஜ் அனுப்பினாள்.
https://www.ineed.police.lk/ மூலம் தேவையான தகவல்களை வழங்குவதன் மூலம் சகோதரனிடம் ஒன்லைன் பொலிஸிடம் புகார் ஒன்றினை பதிவு செய்யும்படி ஹிதவதி வழிகாட்டியது. ஒன்லைன் படிவங்களையும் பூர்த்தி செய்வதில் பிரபாஷ் ஆர்வம் காட்டவில்லை. அவர் வெறுமனே கூறினார்,
“அவற்றை எப்படி செய்வது என்று எனக்கு புரியவில்லை”
அவர் அதை மறந்துவிட விரும்பினார், ஆனால் அவனின் சகோதரி குறித்த அந்த இணைய போர்ட்டலை (இணைப்பு) பின்பற்றி ஒரு முயற்சியினை எடுக்க விரும்பினாள்.
அதன்படி, பிரபாஷின் சகோதரி, பிரபாஷின் தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் அவரது தொலைப்பேசியின் ஐஎம்இஐ எண்கள் எனத் தேவையான அனைத்து தகவல்களையும் குறித்த தொலைபேசி அடைக்கப்பட்டு வந்த பெட்டியின் ஸ்டிக்கர்களில் இருந்து பெற்றுக்கொண்டார். அவள் https://www.ineed.police.lk/ மூலமாக ஒன்லைன் வழியாக வெற்றிகரமாகப் புகார் அளித்தார்.
இதற்கிடையில் பிரபாஷ் ஒரு சிறிய தொலைபேசியை வாங்கி பயன்படுத்தி கொண்டிருந்தார். சுமார் 6 மாதங்களுக்கு பிறகு பிரபாஷுக்கு பொலிஸிடமிருந்து அழைப்பு வந்தது. புகார் கொடுப்பதில் அவ்வளவு அலட்டிக்கொள்ளாததால் அதிர்ச்சியடைந்தார். தனது விபரங்களைப் பயன்படுத்தி தனது சகோதரி ஒன்லைனில் புகார் அளித்ததை அவர் நினைவு கூர்ந்தார்.
பிரபாஷ் காவல் நிலையம் சென்று தனது தொலைப்பேசியை எடுத்துக்கொண்டார். தொந்தரவு இல்லாத ஒன்லைன் சேவைக்கு பொலிசுக்கு நன்றி தெரிவித்தார்.
காவல் நிலையத்தில் இன்னொரு பெண் காத்திருந்தாள். அவள் ஒரு நபரிடமிருந்து குறைந்த விலையில் பிரபாஷின் தொலைபேசியை வாங்கியிருந்தார், குறித்த நபரின் வேலை தினசரி பல்வேறு பொருட்களை விற்றுப் பிழைப்பு நடத்துவதாக இருந்தது. அப் பெண் பதட்டத்தில் நடுங்கிக் கொண்டிருந்தாள். திருடப்பட்ட பொருட்களை வைத்திருப்பது அல்லது வாங்குவது சட்டவிரோதமானது என்பதால் எதிர்காலத்தில் இதுபோன்ற வலைகளில் சிக்க வேண்டாம் என்று பொலிஸ் அதிகாரிகள் அப் பெண்ணை அறிவுறுத்தினர்.
இறுதியில், ஹிதவதியின் சரியான வழிகாட்டுதல் குறித்து உண்மையிலேயே மகிழ்ச்சியடைந்த பிரபாஷின் சகோதரி, இவ்விடயத்தில் இலவசமாக வழங்கிய ஆதரவிற்கு அவர்களுக்குத் தனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொண்டார்.
முன்னெச்சரிக்கை குறிப்புகள்:
- தொலைந்த தொலைப்பேசிகள் தொடர்பான முறைப்பாடுகளை பொலிஸ் நிலையத்திற்குச் செல்வதற்குப் பதிலாக https://www.ineed.police.lk/ என்ற முகவரியின் ஊடாக ஒன்லைனில் முறைப்பாடு செய்யலாம்.
- பயன்படுத்திய இலத்திரனியல் சாதனங்களை குறைந்த விலையில் வாங்கும்போது எச்சரிக்கையாக இருங்கள்.
- உங்கள்தொலைப்பேசிகள்/சாதனங்களின் IMEI (சர்வதேச மொபைல் கருவி அடையாளம்) எண்களை எப்போதும் கவனமாக வைத்திருங்கள்.