கடைசியாக புதுப்பிக்கப்பட்டது டிசம்பர் 4, 2020
உங்களைப் போல நடித்து யாரோ ஒருவர இன்ஸ்டாகிராம் கணக்கை உருவாக்கியிருப்பதைக் கண்டால், உங்கள் பாதுகாப்பிற்காக அதை உடனடியாக இன்ஸ்டாகிராமில் முறைப்பாடு செய்யலாம்.இதன் போது , அரசாங்கத்தால் வழங்கப்பட்ட புகைப்படம் பொறிக்கப்பட்ட அடையாள அட்டை (உதா. இலங்கையருக்கான தேசிய அடையாள அட்டையின் இருபுறமும்) உட்பட தேவையான அனைத்து தகவல்களையும் வழங்குமாறு நீங்கள் கோரப்படுகிறீர்கள்.
உங்களிடம் இன்ஸ்டாகிராம் கணக்கு இருந்தால், செயலி மூலமாக அல்லது இந்தப் படிவத்தை பூர்த்தி செய்வதன் மூலம் அவர்களுக்கு முறைப்பாடு செய்யலாம் .
உங்களிடம் இன்ஸ்டாகிராம் கணக்கு இல்லையென்றால், தயவுசெய்து இந்த படிவத்தை நிரப்பவும்.
ஆள்மாறாட்டம் செய்யப்பட்ட நபரிடமிருந்து அல்லது ஆள்மாறாட்டம் செய்யப்படும் நபரின் பிரதிநிதியிடமிருந்து அவர்களுக்கு அனுப்பப்பட்ட முறைப்பாடுகளுக்கு இன்ஸ்டாகிராம் பதிலளிக்கிறது (எடுத்துக்காட்டு: அவர்களின் பிள்ளை சார்பாக பெற்றோர்).எனவே, உங்கள் நண்பருக்கு யாராவது ஒரு போலி கணக்கை உருவாக்கியிருந்தால், அதை முறைப்பாடு செய்ய உங்கள் நண்பரை ஊக்குவிக்கவும்.
குறிப்பு: கைத் தொலைபேசியில் இருந்து உங்கள் புகைப்பட அடையாள அட்டையைப் பதிவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டால், தயவுசெய்து இந்த படிவத்தை கணினியிலிருந்து சமர்ப்பிக்க முயற்சிக்கவும்.
மூலம் : https://help.instagram.com/370054663112398?helpref=search&sr=1&query=impersonating