கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஜூன் 14, 2023

ஹிதவதியிடமிருந்து பதின்ம வயதினருக்கான புதிய நிகழ்ச்சித்திட்டம்!

இணையத்தில் நீங்கள் உலாவிக்கொண்டிருந்தபொழுது உங்களை பாதுகாக்க உதவிய ஒரு நண்பன்…

முடிக்கப்பட்ட முன்னோடித் திட்டத்தைப் பார்க்கவும் >> https://hithawathiteenshub.blogspot.com/2023/06/blog-post_13.html
யாருக்காக?
  • பதின்ம வயதினருக்காக மாத்திரம் (தரம் 8 தொடக்கம் 13 வரையிலான மாணவர்களிற்கு)
இது எவ்வாறு நிகழ்கின்றது?
  • முதலில், உங்களது பாடசாலையில் நாம் ஒரு பயிற்சிபட்டறையை நடாத்துவோம். “டீன்ஸ் ஹப்பானது” உங்களது பாடசாலையில் ஒரு கூடத்தை நிறுவும்.
  • அதிபர் மற்றும் தகவல் தொழிநுட்ப ஆசிரியர்(கள்) இந்நிகழ்ச்சித்திட்டத்தை முன்னெடுக்க உதவுவர். அது மாத்திரமின்றி, மாணவர்கள் மத்தியில் மாணவர்களிடையே டீன் ஹப் தலைவர்களை நியமிப்போம்.
இதனால் இடம்பெறுவது யாது?
  • தற்பொழுது இணையமின்றி தங்களால் வாழமுடியாது என்பதனை நாம் அறிவோம். நீங்கள் இணையத்தை பாவிக்கும் அதேசமயம் கவனமாகவும் காணப்படவேண்டும்.! இப்புதிய நிகழ்ச்சித்திட்டமானது இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்தவது எவ்வாறு என்பதனை கற்றுக்கொடுக்கும்;.
அது மாத்திரம் தானா? இல்லை… நாம் கற்றுக்கொடுக்கப்போவதாவது:
  • இணையத்தை முறையாக பயன்படுத்துவது எவ்வாறு?
  • செய்யக்கூடியவை யாவை செய்யக்கூடாதவை யாவை?
  • இணையத்தின் அபாயங்கள் யாவை?
  • அவற்றை அடையாளம் காண்பது எவ்வாறு?
  • அத்துடன் இற்றை வரையிலான புதிய தகவல்கள்,
  • நீங்கள் இணையம் சார்ந்த பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டால் என்ன செய்யவேண்டும்?
உங்களுக்கு தெரியுமா?
  • உங்களது அபிமான சமூக வலைத்தளத்தின் ஊடாகவும் டீன்ஸ் ஹப்பில் நீங்கள் இணைந்துக்கொள்ளலாம்.

அத்துடன் முடிவடையாது.
கேள்வி-பதில்  நிகழ்ச்சிகள்

ஒவ்வொரு வார இறுதியிலும் நாம் ஒரு கேள்வியை கேட்போம். அத்துடன் சரியான விடையை முதலில் கூறும் வெற்றியாளரிற்கு பெறுமதிமிக்க பரிசுகளும் வழங்குவோம் (குலுக்கல் முறையில்). நேரடியான நிகழ்ச்சித்திட்டத்தின் பொழுது மேலதிக தகவல்கள்; வழங்கப்படும்.