கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஜூலை 11, 2022

கோவிட் தொற்று போன்ற தொற்றுநோய் காலங்களின் போது, பல்கலைக்கழகங்களின் பணிகளை இணையத்தில் செய்து கொள்வதற்கும், ஒரு கடைக்குள் நுழைய QR குறியீட்டை (ஒரு குறியீட்டு வகை) ஸ்கேன் செய்வது சமீபத்திய (டிரெண்டா) போக்காகிவிட்டது. இது பெரும்பாலும் இளைஞர்களாலும் சில நேரங்களில் பெரியவர்களாலும் பயன்படுத்தப்படும் ஒரு எளிமையான கருவியாகும். ஆகவே இந்த “QR குறியீடு” உண்மையில் என்னவென்று பார்ப்போம்.

QR குறியீடு என்றால் என்ன?

QR என்பது விரைவான மறுமொழி (Quick Response) என்பதன் சுருக்கப்பட்ட வடிவமாகும். QR குறியீடு (கோட்) என்பது அச்சிடப்பட்ட வடிவத்தில் கிடைக்கும் டிஜிட்டல் தரவின் வரைவியல் (கிராஃபிக்) பிரதிநிதித்துவமாகும், இது ஸ்மார்ட் தொலைப்பேசி அல்லது வேறு ஏதேனும் ஸ்கேனிங் சாதனம் மூலம் அச்சிடப்பட்டு பின்னர் ஸ்கேன் செய்யப்படலாம்.

பார் குறியீடுகளைப்போலன்றி, QR குறியீடுகள் செங்குத்து மற்றும் கிடைமட்ட அச்சுகளில் தரவுகளைச் சேமிக்கின்றன. இதன் காரணமாக, QR குறியீடுகள் அதிக தரவுகளைச் சேமிக்கின்றன. இதன் காரணமாக QR குறியீடுகள் அதிக தரவை சேமிக்கின்றன. QR குறியீட்டில் உள்ள தரவு, இணையதள முகவரி (இணைப்புகள்/URL), PDF கோப்பு, பதிவிறக்கும் பக்கம், வினாப்பட்டியல்கள், வீடியோ மற்றும் ஆடியோ ஆகியவற்றைக் கொண்டிருக்கலாம்.

QR குறியீடுகள் ஆபத்தானதா?

QR குறியீடுகள் என்பது தரவு சேமிப்பு ஊடகம் என்பதால், பொதுவாக, இது ஆபத்தானது அல்ல. இருப்பினும், ஒரு மின்னஞ்சலில் தீங்கிழைக்கும் இணைப்பு கொண்டிருப்பதைப் போலவே, QR குறியீட்டிலும் தீங்கிழைக்கும் முகவரிகள் (இணைப்புகள்/URL) இருக்கலாம். எனவே, QR குறியீடுகளுடன் இணைக்கப்பட்ட URLகளை பயன்படுத்தும் பொது, அதன் நம்பகத்தன்மையினை சரிபார்க்காமல் தொடர்ந்தால், அவை அபாயகரமானதாக இருக்கக்கூடும்.

QR குறியீடுகள் எவ்வாறு ஆபத்தானவை?

  • QR குறியீட்டில் உள்ள URL (இணைப்பு) உங்கள் கணக்குகளின் பயனர்பெயர்கள் மற்றும் கடவுச்சொற்களைத் திருட ஃபிஷிங் இணையதளத்திற்கு உங்களை வழிநடத்தும்.
  • URLகள் உங்களைத் தீங்கிழைக்கும் (மால்வேர்) இணையதளங்களுக்கு அழைத்துச் செல்லும். தீங்கிழைக்கும் URLகள் உங்கள் சாதனத்தில் ஒரு பயன்பாட்டை (ஆப்) திறந்து சாதனத்தில் உள்ள தரவை அணுக முயற்சி செய்யலாம்.
  •  QR குறியீட்டை ஸ்கேன் செய்யப் பயன்படுத்தப்படும் பயன்பாட்டில் தீங்கிழைக்கும் QR குறியீடுகள் உங்கள் சாதனத்தை கட்டுப்படுத்துவதற்கு அனுமதியளிக்கும் பாதிப்புகள் இருக்கக்கூடும்.
  • QR குறியீடு ஸ்கேனிங் என்பது பணப் பரிவர்த்தனைகள் செய்யப்படும் ஒரு பிரபலமான முறையாக மாறியுள்ளதால் நிதி மோசடிகள் இடம்பெறலாம்.
  • QR குறியீடுகள் மூலம் “கிளிக் ஜாக்கிங்”. உண்மையான/அதிகாரப்பூர்வ இணையதளமாகச் செயற்பட்டு பயனர்களை ஏமாற்றும், போலியான இணையதளங்களான இவை மூலம் இங்குத் தீங்கிழைக்கும் பயன்பாடுகளை (மால்வேரைப்) பதிவிறக்கம் செய்வதற்கு ஊக்குவிக்கும் வகையில் பொத்தான்களைப் பயன்படுத்துவதற்கு வாடிக்கையாளர்களைத் தவறாக வழிநடத்தலாம்.

தீங்கிழைக்கும் QR குறியீடுகளிலிருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?

  •  சந்தேகத்திற்கிடமான பகுதிகளுக்கு QR குறியீட்டை சரிபார்க்கவும். நீங்கள் QR குறியீட்டை ஸ்கேன் செய்யும் போது, ​​அசல் குறியீட்டின் மீது வைக்கப்பட்டுள்ள ஸ்டிக்கர் போன்றவற்றால் குறியீடு சிதைக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தவும்.
  • QR குறியீட்டை ஸ்கேன் செய்ய மூன்றாம் தரப்பு பயன்பாடுகளை (ஆப்களை) பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். அதற்குப் பதிலாக, சாதன உற்பத்தியாளரால் பரிந்துரைக்கப்படும் நம்பகமான பயன்பாடுகளைப் பயன்படுத்தவும்.
  • URL ஐச் சரிபார்க்கவும் (இணைப்பு) – QR குறியீட்டால் குறிப்பிடப்பட்ட URL ஐ கவனமாகச் சரிபார்த்து, SSL சான்றளிக்கப்பட்டிருந்தால் (https:// இல் தொடங்கும்) இணைப்பைக் சொடுக்கவும்.

மூலம்:
https://learn.g2.com/qr-code-security
https://theconversation.com/how-qr-codes-work-and-what-makes-them-dangerous-a- computer-scientist-explains-177217