கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஜூன் 30, 2023
இரகசிய குறியீட்டு நாணய மோசடிகள் 01
பொறுப்புத்துறப்பு: இத்தகவல்களானவை, ஏற்றுகொள்ளப்பட்ட இரகசிய குறியீட்டு நாணயமாக அல்லது வேறு சிறப்பு வழங்குநர், சேவை அல்லது வழங்களாக கருதப்படாது. இது வர்த்தகத்திற்காக பரிந்துரைக்கப்படவில்லை. இது புரிதல் மற்றும் கல்வி நோக்கங்களுக்கு மாத்திரமானதாகும். இந்த கட்டுரையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் https://www.finder.com.au மற்றும் https://bitcoin.org/en/scams என்பவற்றிலிருந்து பெறப்பட்டவையாகும்.
இரகசிய குறியீட்டு நாணயம் என்றால் என்னவென கற்க வேண்டுமா? பக்கத்திற்கு செல்லவும்
இரகசிய குறியீட்டு நாணய மோசடி என்றால் என்ன?
இரகசிய குறியீட்டு நாணயங்களானவை புதிய பாவனையாளர்களுக்கு சிக்கலானதும் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடியதாவதுடன் மேலும் மோசடியாளர்களுக்கு, அவர்களை கருத்தியல் இலக்கை கொண்டவர்களாக உருவாக்கக்கூடிய அனைத்தையும் சிறிது ஒழுங்குப்படுத்தும். ஆனால் போதியளவு அறிவைக் கொண்டு இரகசிய குறியீட்டு நாணய மோசடிகளுக்கு எதிராக தங்களை பாதுகாத்துக்கொள்வதற்கு சில சிறந்த பழமையான நடப்பு வழக்கின் மூலம் பல விடயங்களை தங்களால் மேற்கொள்ள முடியும்.
நாம் இக்கட்டுரையில் கீழ்குறிப்பிடப்பட்டிருக்கும் முக்கிய தலைப்புகளை பற்றி கலந்துரையாடவே எதிர்பார்த்துள்ளோம்:
இரகசிய குறியீட்டுநாணய மோசடிகள் எவ்வாறு தோற்றமளிக்கின்றன? பகுதிக்கு செல்லவும்
சரிபார்ப்பு பட்டியல்: இரகசிய குறியீட்டு மோசடியை எவ்வாறு கண்டறிவது பகுதிக்கு செல்லவும்
கவனம் செலுத்த வேண்டிய 16 பொதுவான இரகசிய குறியீட்டு மோசடிகள் பக்கத்திற்கு செல்லவும்This article is coming soon
இரகசிய குறியீட்டுநாணய மோசடிகள் எவ்வாறு தோற்றமளிக்கின்றன?
மோசடிகள் – பிட்கொயின் புரட்சி, பிட்கொயின் பரிமாணம் மற்றும் ஔசீ முறைமை
2019 மற்றும் 2020களில் சுழற்சியுற்ற மூன்று பொதுவான இரகசிய குறியீட்டு நாணய மோசடிகள் ‘பிட்கொயின் புரட்சி’, ‘பிட்கொயின் பரிமாணம்’ மற்றும் ‘ஔசீ முறைமை’ என்பனவாகும்.
அனைத்தும் தொழிற்பாட்டிப்படையில் ஒரே மோசடியாக இருப்பதோடு, காலத்தினடிப்படையில் புதிய பெயரினைக் கொண்டு ஒத்த பெறுபேறுகளையே உறுதியளிக்கும் விதத்தில் மீளப் பயன்படுத்தப்படுகின்றது. அவர்கள் பொதுவாக சில வகையான முதலீட்டு வாய்ப்பிற்காக உரிமை கோருவதுடன் சமூக வலைதளங்களில் உருவாக்கப்பட்ட ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரமுகர்களின் விரிவாக்கலுக்காகவே பயன்படுத்துகின்றனர். அண்மையில், இந்த மோசடிகள் இரகசிய குறியீட்டு நாணய வர்த்தக பொட்களாக பாவனை செய்யப்பட்டன.
இந்த பதிவுகள் அதிகளவில் பணம் செலுத்திய விளம்பரங்கள், பூட்ஸ்கள் மற்றும் இணக்கப்பாட்டுடைய கணக்குகளினூடாக விரிவாக்கப்படுகின்றன.
மோசடி பதிவுகள் எவ்வாறு தோற்றமளிக்கின்றன என்பதற்கான உதாரணம் இதுவாகும்:
(image https://www.finder.com.au.)
இந்த சமூக ஊடக பதிவுகளில் இவ்விணைப்பை பின்தொடரும் நபர்கள் பொதுவாக மோசடி பொருட்கள் மற்றும் பொய்யான நற்சான்று பத்திரங்கள் பற்றிய கதைகளினால் உருவாக்கப்பட்ட சட்டபூர்வமான செய்தி தளத்தைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள வலைத்தளத்தினையே வந்தடைவார்கள்.
இவ்வாறான மோசடிகளுக்கு இரையானவர்கள் பொதுவாக மாயையான இலாபத்தினை உருவாக்கக்கூடிய கணக்கிற்கு சில வகையான கொடுப்பனவுகளை செலுத்துவதற்காக வழிநடாத்தப்படுவர். முன்னர், இவ்வாறான மாயையை உருவாக்குவதற்கு பிட்கொயின் புரட்சியானது சாதாரணமாக எழுமாற்றான இலக்க உருவாக்கியை பயன்படுத்தியுள்ளது.
இம்மோசடியானது பொதுவாக குறித்த இரையான நபர் இவற்றில் ஒன்றும் உண்மையானதல்ல என கண்டறிந்து தோற்றமளித்த இலாபத்தினை பின்வாங்குவதற்கு தீர்மானிக்கும் வரை அவை தொடரும். சிலவேளை இவர்கள் “முகவரொருவரின்” உதவியுடன் இந்நிதிகளை மீளப்பெறுவதற்கு முன்னர் மேலதிக கொடுப்பனவுகளை அவர்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறுவர்.
இரகசிய குறியீட்டு நாணய வர்த்தக பொட்கள் உண்மையானவை என்ற போதிலும் இவை இடர்களற்ற பண இயந்திரமன்று. இவை ஒரு சிலவகையான மோசடிகளாகவே பரிந்துரை செய்யப்படுகின்றன. ஒப்பீட்டு ரீதியில் இங்கு பாதுகாப்பான முறையில் பிட்கொயின்களை கொள்வனவு செய்வதற்கும் விற்பனை செய்வதற்குமான வழிகள் காணப்படுகின்ற போதிலும் அதுவொரு இடர்களற்ற பண இயந்திரமன்று.
சரிபார்ப்பு பட்டியல்: இரகசிய குறியீட்டு மோசடியை எவ்வாறு கண்டறிவது?
குறிப்பிட்ட இரகசிய குறியீட்டு வலைதளமானது, மோசடியானது அல்லது மோசடியற்றது என்பதனை முதலில் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த சரிபார்ப்புப் பட்டியலின் உதவியுடன் அவ்வாறான தளங்களிலுள்ள சட்டபூர்வமான வழங்குநர்களை வரிசைப்படுத்துவதுடன் அனைத்தையும் புறக்கணிப்பது சிறந்ததாகும்.
- https இன் (https அல்ல) மூலம் அவ்வலைத்தளத்தை இணைப்பது பாதுகாப்பானதா? ஆம்முகவரி https என்பதற்கு பதிலாக http என்று ஆரம்பிக்குமாயின் தாங்கள் அவ்வலைத்தளத்திற்கு அனுப்பிய தரவு பாதுகாப்பற்றது.
- தங்களால் பாதுகாப்பானது எனும் சொல்லை அல்லது வலை உலாவியின் முகவரி பட்டையிலுள்ள பேட்லொக்கில் உருவமொன்றை காண முடிகின்றதா?
- வலைத்தளத்தின் URL ஆனது வெளிப்படையான எழுத்துப்பிழைகள் அல்லது தவறுகளை கொண்டுள்ளதா? ஆம் எனில், அது பொய்யானதாக இருக்கலாம்.
- அவ்வலைத்தளத்தின் கூறுகள் மோசமான இலக்கணம், சங்கடமான சொற்றொடர் அல்லது எழுத்து பிழைகளை கொண்டுள்ளதா? ஆம் எனில், இது முக்கியமாக மோசடியை குறிப்பிடுவதல்ல. ஆனால், தாங்கள் தொடர்ந்தும் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டுமென்பதனை பொருள்படுத்தும்.
- அவ்வலைத்தளம் அசாதாரணமான முறையில் அதிகளவு விளைவுகளுக்கு உறுதியளிக்கின்றா? (உதாரணமாக, நீங்கள் தங்களது முதலீட்டை இரட்டிப்பாக்கக்கூடிய சந்தர்ப்பத்தில் அவற்றை உரிமை கோருகின்றதா?) இதற்கு மிகப்பெரிய சிவப்புக் கொடியை உயர்த்த வேண்டுமென்பதோடு இது மோசடிக்கான பொதுவான சுட்டியாகும்.
- அங்கு எங்களை பற்றி எனும் பக்கம் இருக்கின்றதா? அது கம்பனியின் பின்புலத்திலுள்ள உண்மையான நபர்களை காட்டுகின்றதா? அதில் கம்பனி எங்கு பதிவு செய்யப்பட்டுள்ளதெனும் விபரங்கள் வழங்கப்பட்டுள்ளதா? அதில் கம்பனி யாருடையது மற்றும் அது எதனை பற்றியது எனும் தகவல்கள் குறைந்தளவில் அல்லது இல்லையெனில் நீங்கள் மோசடியாளர்களுடன் கொடுக்கல் வாங்கல் மேற்கொள்கின்றீர்கள்.
- இந்த வலைத்தளத்துடன் சட்டபூர்வமான மரியாதைக்குரிய வலைத்தளங்கள் இணைந்துள்ளதா? அவ்வலைத்தளமானது நம்பிக்கைக்குரியது மற்றும் மரியாதைக்குரியது என்பதனை இது குறிப்பிடும்.
- வலைத்தளத்தின் ஏனைய பயனாளிகள் என்ன கூறுகின்றனர்? அங்கு ஏதேனும் எதிர்மறையான மதிப்பீடுகள் காணப்படுகின்றதா? மற்றும் ஆம் எனில், அவர்கள் என்ன கூறுகின்றனர்? இரகசிய குறியீட்டு சமூகம் பொதுவாகவே மோசடிகள் எனும் சொல்லை பற்றி விரைவாக குறிப்பிடுகின்றது.
- டொமைனின் அல்லது வலைத்தளத்தின் பதிவுசெய்யப்பட்ட உரிமையாளர் யார்? உரிமையாளர் தனியார் பதிவிலிருந்து மறைந்துள்ளாரா? டொமைன் ஆறு மாதத்திற்கும் குறைவாக பதிவு செய்யப்பட்டுள்ளாரா? வலைத்தளத்தின் பின்புலத்திலுள்ள நபர்களை/ நிறுவனம் பற்றிய மேலதிக தகவல்களை கண்டறிவது சிறந்ததாகும்.
- இதனை தவிர வலைத்தளத்தினை பற்றி ஏதேனும் காணப்பட்டால் சிவப்பு கொடியை உயர்த்துங்கள் அல்லது சாதாரணமாக உண்மையிலுமே சிறந்ததென தோற்றமளிக்கின்றதா?
- வலைத்தளமானது ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரமுகர்களை உரிமைக்கோருகின்றதா? அதிகளவான முதலீட்டு மோசடிகள், அவர்களது குறைவான காப்பில் நபர்களை இணைப்பதற்கு பொய்யாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரமுகர்களை பயன்படுத்துகின்றனர்.
- நீங்களை இவற்றை பற்றி சமூக ஊடகத்தின் வாயிலாகவா முதல் தடவை கேள்வியுற்றீர்கள்? அல்லது முதலில் அவர்கள் உங்களை அணுகினார்களா? சமூக ஊடகம் மற்றும் வேண்டப்படாத செய்திகள் என்பன புதிய இரையர்களை அடைவதற்கு மோசடியாளர்களால் பயன்படுத்தப்படும் பொதுவான வழிமுறைகளாகும்.
தயவுசெய்து இந்த சரிபார்ப்பு பட்டியலானது எவ்விதமான தவறும் ஏற்படாது என்பதற்கு அப்பாற்பட்டது. ஒரு வலைத்தளமானது மேற்குறிப்பிட்ட பல பரீட்சீப்பில் சித்தியடைந்து வர்ணங்களுடன் காணப்பட்டாலும் இன்னும் மோசடியாகவே காணப்படுகின்றது. மிகவும் முக்கியமான விடயமென்னவெனில், எந்தவொரு வலைத்தளத்திற்கோ அல்லது செயலிக்கோ தங்களது சுய தகவல்கள் அல்லது நிதியியல் தகவலை வழங்கும் முன்னர் அக்கறையுடன் செயற்பட வேண்டுமென்பதனை நினைவில் கொள்ள வேண்டுமென்பதாகும்.
களங்கள்::
https://www.finder.com.au/bitcoin-scams
https://bitcoin.org/en/scams