கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஜனவரி 22, 2021
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களும் இடங்களும் கற்பனையானவை.
ஷிம்மி ஒரு சமூக ஊடக பயனர். அண்மையில் அவர் பேஸ்புக்கில் சில துணிக்கடைகளை சபார்த்துக் கொண்டிருந்தார், அவற்றில் இருந்த கடையொன்றில் ஒரு குறிப்பிட்ட ஆடையின் விலையை அறிய விரும்பினார். அவர் தனது தொலைபேசி எண்ணை உரிய கடையின் இணையத்தள கருத்துப் பிரிவில் தட்டச்சு செய்து, கடை உரிமையாளர்களிடம் தன்னை தொடர்பு கொள்ளுமாறு கேட்டார்.
அன்று ஷிம்மிக்கு மிகவும் மோசமான நாளாக அமைந்தது . அவர் தொடர்ச்சியாக தேவையற்ற அழைப்புகளைப் பெறுகிறார். அவர் மிகவும் அதிர்ச்சியடைந்தார், அவளுடைய சிறந்த தோழியான அனுஷா, ஷிம்மியிடம் வந்து தான் பேஸ்புக் மூலம் ஒரு இணைப்பைப் பெற்றதாககவும் அதைத் திறந்தவுடன், ஷிம்மியின் புகைப்படமும் அவருடைய தொலைபேசி இலக்கமும் தேவையற்ற விவரங்களுடன் அந்த தளத்தில் இருப்பதை காட்டினார்.
முன்னெச்சரிக்கை உதவிக்குறிப்புகள்: உங்கள் தொலைபேசி இலக்கத்தினை பொதுவெளிகளில் பகிர வேண்டாம். உங்கள் தொலைபேசி இலக்க விவரங்களை நீங்கள் பகிர விரும்பினால், தயவுசெய்து சமூக ஊடக தளத்தால் வழங்கப்பட்ட தனிப்பட்ட செய்தி சேவையை பயன்படுத்தவும்